இந்திய அணி இலங்கை சுற்றுப்பயணத்தில் உள்ளது நாம் அறிந்ததே. இதில் டெஸ்ட் போட்டிகளில் 3-0 என்றும், ஒரு நாள் தொடரில் 5-0 என்றும் இந்தியா வெற்றி பெற்றதது.

சுவாரசியம் சற்று கம்மியாகவே இருந்த இந்த தொடரில் அந்த ஆச்சர்ய சம்பவம் நான்காவது ஒரு நாள் போட்டியில் நடந்தது. இந்தியா செட் செய்த 375 என்ற இமாலய இலக்கை நோக்கி இலங்கை தடுமாறிக்கொண்டிருந்தது. அப்பொழுது ட்ரிங்க்ஸ் பிரேக்கில் நம் வீரர்கள் புவனேஸ்வர் குமார் , யுவேந்திர சாஹல் ட்ரிங்க்ஸ் எடுத்துக்கொண்டு மைதானத்தில் நுழைந்தார்கள்.

அவர்களுடன் இரண்டு பெண்கள் ஜூஸ் மற்றும் துண்டு எடுத்துக்கொண்டு உள்ள நுழைந்ததும் இலங்கை ரசிகர்கள் குஷியில் ஆரவாரம் செய்தார்கள். நம் இந்திய வீரர்களுக்கும் இது சற்றே வியப்பாக தான் இருந்தது, என்பது இந்தப் புகைப்படங்களை பார்க்கும் பொழுதே நமக்கு புரிகிறது.

ஏற்கனவே கல்லேவில் நடந்த டெஸ்ட் போட்டியின் பொழுதும் இதே போல் நடந்தது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: அடி ஆத்தி இப்புடி வைச்ச கண்ணு வாங்காமல் பார்க்குறானுங்க நம்ம பயலுக.