பாலியல் புகாரில் சிக்கிய ஹாலிவுட்டின் 71 வயது முன்னணி நடிகர்?… ரசிகர்கள் அதிர்ச்சி

ஹாலிவுட்டின் முன்னணி நடிகரும் இயக்குநருமான சில்வர்ஸட் ஸ்டாலோனுக்கு எதிராக பாலியல் புகார் எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சலிஸ் காவல்துறை அறிவித்திருக்கிறது. இந்த விவகாரம் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

stolan
stolan

பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளரான ஹார்வி வெய்ன்ஸ்டீன், ஆஸ்கர் விருது வென்ற படங்களைத் தயாரித்து புகழ் பெற்றவர். ஆனால், இவரது பெயர் மோசமான ஒரு காரணத்துக்காக உலகம் முழுவதும் உச்சரிக்கப்பட்டு வருகிறது. ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகள் உள்பட 80-க்கும் மேற்பட்ட நடிகைகள் இவர் மீது பாலியல் புகார் கூறியிருப்பது ஹாலிவுட் மட்டுமல்லாது ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றே கூறலாம். ஒரு நபர் மீது தொடர்ச்சியாக 80-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைப்பது ஹாலிவுட் வரலாற்றில் அநேகமாக இதுதான் முதல்முறை.

திரை வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த ஆரம்ப காலத்தில் தங்களுக்கும் அவர் தொல்லை கொடுத்ததாக ஏஞ்சலினா ஜூலி, க்வினெத் பேல்ட்ரோ, ரோஸ் மெக்குவான், சல்மா ஹாயாக், உள்ளிட்ட முன்னணி நடிகைகள் பலரும் ஹார்வி மீது குற்றம்சாட்டினர். சமீபத்தில் நடந்து முடிந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பேசிய இத்தாலி நடிகை ஆசியா அர்ஜெண்டா கூட அவர் மீது பாலியல் புகார் தெரிவித்து இருந்தார். அவர் மீதான புகார்கள் டிவிட்டரில் `மீ டூ’ (#Metoo) என்ற ஹேஷ்டேக்கில் மிகப்பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

அதிகம் படித்தவை:  சூப்பர் ஹிட்டாக வேண்டிய விஜய் படம் சதியால் வீழ்ந்த கதை தெரியுமா?

இந்தநிலையில், ஹாலிவுட்டின் முன்னணி நடிகரானசில்வஸ்டர் ஸ்டாலோன் மீது எழுந்த பாலியல் புகார் தொடர்பாக லாஸ் ஏஞ்சலிஸ் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கடந்த 1976ம் ஆண்டு வெளியான ராக்கி படம் மூலம் ஹாலிவுட்டில் பிரபலமானவர் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன். அந்த படம் ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்தது. ராக்கி படத்தின் தொடர்ச்சியாக வந்த படங்கள் சில்வர்ஸ்டர் ஸ்டாலோனுக்கு உலகமெங்கும் ரசிகர்கள் கூட்டத்தை ஏற்படுத்தியது. ஆக்‌ஷன் ஹீரோவாக அவரை அடையாளப்படுத்திய ராக்கி சீரிஸ் படங்கள் சில்வர்ஸ்டர் ஸ்டாலோனுக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தியது.

அதிகம் படித்தவை:  சாமி-2 படத்தில் திரிஷாவுக்கு பதில் இந்த நடிகையா.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.! ஹரிக்கு என்னாச்சு.?

அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்த அவர், இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் ஹாலிவுட்டில் முத்திரை பதித்தார். எக்ஸ்பேண்டபிள்ஸ், பிரிசன் பிரேக் என 60 வயதுக்கு மேலும் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் வசூலில் சக்கைப்போடு போட்டன. தற்போது 71 வயதாகும் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன், தனக்குக் கடந்த 1990களில் பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஒருவர் கடந்த ஆண்டு நவம்பரில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் உண்மைத் தன்மை குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக லாஸ் ஏஞ்சலிஸ் காவல்துறையில் பாலியல் புகார்களை விசாரிக்கும் துறை அறிவித்துள்ளது. இந்த புகார்களை மறுத்துள்ள ஸ்டாலோன் தரப்பு, இதன்மூலம் அவரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்க முயற்சி நடப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கின்றனர். மேலும், புகார் அளித்த அந்த பெண், பரஸ்பர சம்மதத்துடன் ஸ்டாலோனுடன் கடந்த 1980களில் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்ததாகவும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.