திருச்சி : நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் அமைக்க ஏதிர்ப்புப் தெரிவித்து சிறை சென்ற மாணவி அங்கு உண்ணாவிரதம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கல்லூரி மாணவர்கள் ஏழு பேர் கடந்த 15-ம் தேதி நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க கோயம்புத்தூரில் இருந்து ரயில் கிளம்பினார்கள். வளர்மதி, சுவாதி, தினேஷ்குமார், கார்த்திக் உள்ளிட்ட பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த ஏழு கல்லூரி மாணவர்கள் ரயில் வரும் வழியிலேயே தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

அதிகம் படித்தவை:  இன்று முதல் அறுவை சிகிச்சை கிடையாது ; மருத்துவர்கள் சங்கம் அதிரடி!

திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட இந்த மாணவர்களை சிறை நிர்வாகம் சித்திரவதை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.குறிப்பாக பெண்களை சோதனை என்ற பெயரில் நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  முடிவடைந்ததாம் தனுஷின் “வட சென்னை - பார்ட் 1" ஷூட்டிங் !

மேலும் மாணவிகள் ஒவ்வொருவரையும் தனித்தனி சிறை அறையில் அடைத்தாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த மாணவிகளில் ஒருவர் சிறைக்குள்ளேயே உண்ணாவிர போராட்டம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.