ஆல் ஏரியாலயும் ஐயா கில்லி.. இந்திய அளவில் 4வது இடம் பிடித்த விஜய், எதில் தெரியுமா?

தளபதி விஜய் இன்றைய இளைஞர்களின் டிரெண்ட் செட்டராக இருக்கிறார். அவரது படத்தின் அப்டேட், ரிலீஸ், பாடல், அதில் பேசும், டயலாக், நடனம், சைக்கிளில் சென்றால் கூட சமூக ஊடகங்களில் குறிப்பாக டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகும். அந்த வகையில், தளபதி விஜய் எக்ஸ் தள பிரபலங்களின் பட்டியலில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார்.

தமிழ்நாட்டுல இன்னைக்கு இருக்கிற காலேஜ் பசங்கல்ல இருந்து, லைஃப்லை செட்டில் ஆனவங்க வரைக்குமே சில பேருகிட்ட ஒரு முக்கியமான ஆசை என்னவா இருக்கும்னா அது எப்படியாச்சும் ஒரு படத்திலாவது நடிச்சிறனும் அப்படீங்கறதுதான். அந்தளவுக்கு சினிமா மோகம் பலரையும் ஆட்டிப் படைத்து வருகிறது.

சினிமாவுக்குள்ள போறதுக்கால ஒரு எண்ட்ரி பாயிண்டாக முன்பெல்லாம் நாடகம், சிபாரிசு, போட்டோ ஷூட் இதெல்லாம் இருந்த நிலையில், தொழில்நுட்ப வளர்ச்சி இப்ப அடியோட எல்லாத்தையும் தலைகீழா மாத்தியிடுச்சு. நடிகர்களின் வாரிசுகளாக இருந்தாக்கூட அவுங்களுக்கும் திறமையில்லாமல் ஃபீல்டுல நிலைக்க முடியாதுங்கறத இன்னிக்கு எல்லோரும் ஒத்துக்கிறாங்க. அந்தளவுக்கு இணையதள வளர்ச்சி, சமூக வலைதளங்களின் ஆதிக்கம், மக்கள் செல்போன், மீடியா, டிவி, பேப்பர், புக்ஸுன்னு பலவற்றில் இருந்து தங்களை அப்டேட் செய்து கொள்கின்றனர்.

அந்த வகையில், புத்திசாலிகளாவே மக்கள் உள்ளனர். இன்றெல்லாம் படம் ரிலீஸான ஒரு நாளில் அதை ரிசல்டை மக்கள் கூறி அதை தொடர்ந்து ஓடவைக்கவோ, அல்லது அதை பருத்திக் குடோன்லியே இருந்திருக்கலாம் என்று கூறுவதுபோல் விமர்சனம் கூறி வருகின்றனர். எனவே நடிகராக இருப்பதும் தொடர்ந்து லைம் லைட்டில் உலா வருவதும். ரசிகர்களைத் தக்க வைத்து, அவர்களின் கொண்டாட்டத்துக்கு ஹிட் படைப்புகள் கொடுப்பதும் ஒன்றும் லேசுப்பட்ட விஷயமில்லை.

அந்தவகையில், சினிமாவில் இந்திய அளவில் அறியப்பட்ட தமிழ் நடிகர் விஜய். இவரது நடனத்திற்கே கோலிவுட்டை தாண்டி, டோலிவுட், பாலிவுட், மாலிவுட் வரை நடத்திரங்களே கூட ரசிகர்களாக இருக்கும் நிலையில், தமிழ் நாட்டில் அவரது ரசிகர் பட்டாளத்தையும் அவரது பட ரிலீசின் போது ரசிகர்களின் கொண்டாட்டத்தையும் சொல்ல வேண்டுமா?

அந்தளவுக்கு பிரலமாக உள்ள விஜய், கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில், எக்ஸ் என்ற சமூக வலைதள பக்கத்தில், அதிகம் பேசப்பட்ட நபர்களின் பட்டியலில் 4 வது இடத்தைப் பிடிதிருக்கிறார். இதில் வருத்தப்படத்தக்க இன்னொரு விஷயம் என்னவென்றால் விஜய்யைத் தவிர வேறு எந்த தமிழ் நடிகரும் இதில் 10 பத்து இடங்களும் வரவில்லை என்பதுதான்! இந்த நிலையில், இந்தியளவில் அதிகம் பேசப்பட்ட நபர்களின் பட்டியலில் விஜய் 4வது இடம் பிடித்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News