புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

மூளை இல்லாமல் பேசிய பேட் கம்மின்ஸ்.. ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கிய ஜென்டில்மேன் கில்க்ரிஸ்ட்

கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் கேம் என்பதை பல ஜாம்பவான்கள் நிரூபித்த போதிலும் ஆஸ்திரேலியா மாதிரியான உலகத்தரம் வாய்ந்த அணிகள் தங்களது மோசமான நடத்தையால் அவப்பெயர்களை வாங்கி வருகிறார்கள். சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியை அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை, வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்கள். தங்கள் சொந்த நாட்டில் இப்படி ஒரு மோசமான தோல்வியை அவர்கள் இதுவரை பார்த்ததில்லை.

இந்த தோல்விக்கு பின் அந்த அணியின் கேப்டன் பேட் கம்மீன்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் நாங்கள் தான் நம்பர் ஒன் அணி என்று இன்னும் பழைய பெருமைகளை பேசி அருவருப்பான கருத்துக்களை பகிர்ந்தார். இது ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள முன்னால் ஜாம்பவான்களுக்கு எரிச்சலை கிளப்பியுள்ளது. கில் கிறிஸ்ட், ஸ்டீவன் வாக் போன்ற வீரர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த தோல்வியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேப்டன் பேட் கம்மீன்ஸ் இடம் கேட்டதற்கு,இது எங்களுக்கு தோல்விதான் ஆனால் இந்த தோல்வியால் நாங்கள் முதல் இடத்தில் இருந்து இறங்கவில்லை அதே இடத்தில் தான் நீடிக்கிறோம் என்று புத்தி இல்லாமல் சிறுபிள்ளைத்தனமாக பதில் அளித்திருந்தார்.

அதுமட்டுமின்றி இந்தியா அந்த போட்டியில் விளையாடும் பொழுது நெகட்டிவ் லைனில் பந்து வீசி ஆஸ்திரேலியா அணி தங்களது தகாதாரத்தை கெடுத்துகொண்டனர். குறிப்பாக விராட் கோலி 100 ரண்களை நெருங்கும் பொழுது எரிச்சல் ஊட்டும் விதமான பந்துகளை வீசி அம்பையரிடம் வாங்கிக் கொண்டனர். அதாவது லெக் திசையில் வெளியே வீசி பேட்ஸ்மேன்களை வெறுப்பேற்றினார்கள் இதற்கு அம்பையர் வைடு கொடுத்து பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

Trending News