Tamil Cinema News | சினிமா செய்திகள்
14 வருடம் கழித்து கில்லி படம் தயாரித்த ஏ எம் ரத்னத்துக்கு கால்சீட் கொடுத்த சூப்பர் ஸ்டார்.. திருந்திட்டேன் என்று சொன்னாராம்!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்த தயாரிப்பாளர் என்றால் அது ஏஎம் ரத்னம் தான். குஷி, தூள், கில்லி, என்னை அறிந்தால், வேதாளம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளார்.
அது மட்டுமில்லாமல் பல இளம் நடிகர்களை வைத்தும் பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். தெலுங்கிலும் ஸ்ரீ சூர்யா மூவிஸ் என்றால் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனமாக இருந்தது.
ஆனால் இடையில் தளபதி விஜய்யுடன் சில கருத்து வேறுபாடுகளால் அவர் எம் ரத்னத்துக்கு கால்சீட் தர மாட்டேன் என கூறிவிட்டார். அதேபோல் தல அஜித்தின் வேதாளம் படத்தில் ஏற்பட்ட சிறு பிரச்சினை காரணமாக இனி அவருக்கு கால் சீட் கிடையாது என தெரிவித்து விட்டார்.
இருந்தாலும் விடாக்கண்டன் ஆக தொடர்ந்து தல அஜித்தை வைத்து படம் தயாரிக்க பல திட்டம் போட்டார். ஆனால் ஒன்றும் பலிக்காமல் போய்விட்டது. தளபதி விஜய்க்கும் நிறைய நெருக்கடிகள் கொடுத்துள்ளாராம்.
இந்நிலையில் சமீபகாலமாக அவருக்கு படவாய்ப்புகள் யாரும் தராத நிலையில் தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் அவருக்கு வாய்ப்பு தர முன் வந்திருக்கிறார்.
ஏஎம் ரத்னம் தயாரிப்பில் தெலுங்கில் குஷி மற்றும் பங்காரம் என இரண்டு படங்களில் நடித்துள்ளார் பவன் கல்யாண். லாக் டவுன் முடிந்த பிறகு ஏ எம் ரத்னம் தயாரிப்பில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம் பவன் கல்யாண்.
இந்த தகவலை வலைப்பேச்சு நண்பர்கள் தெரிவித்தனர்.
