வாகை சூடவா படத்தின் மூலம் இசையமைப்பாளாராக அறிகமானவர் ஜிப்ரான். இதை தொடர்ந்து உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம் ஆகிய படங்களுக்கு இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இவருடைய இசையில் அடுத்து சென்னை டூ சிங்கப்பூர் என்ற படத்தின் பாடல்கள் வரவுள்ளது, இந்த பாடல்கள் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு காரிலேயே சென்று ஒவ்வொரு நாட்டில் ரிலிஸ் செய்யவுள்ளனர்.

தற்போது இவர்கள் மணிப்பூரில் சிக்கிக்கொண்டு விட்டதாகவும், அங்கு நிலநடுக்கம், உள்நாட்டு கலவரம் நடப்பதால் இவர்கள் பயணத்தில் அரசாங்கமே தடை விதித்துள்ளது.

ஆனால், நாங்கள் சென்றே தீருவோம், எப்படியாவது பாடல்களை வெளியிட்டே தீருவோம் என ஜிப்ரான் தன் பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.