Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினிகாந்த் கொடுத்த ஷாக் ஓரம் கட்டிட்டு.! நம்ம கஜினிகாந்த் ஷாக்க கொஞ்சம் பாருங்க.!

ஹர ஹர மஹா தேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து என இரண்டு அடல்ட் காமெடி படத்தை எடுத்து இளசுகளிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றி பெற்றவர்தான் இயக்குனர் சந்தோஷ் பி . ஜெயகுமார் இருட்டு அறையில் முரட்டு குத்து பல பிரபலங்கள் எதிர்த்தாலும் இந்த வருட ஹிட் பட வருசையில் சேர்ந்து விட்டது.
இயக்குனர் சந்தோஷ் தற்பொழுது ஆர்யாவை வைத்து கஜினிகாந்த் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை சாயிஷா சைகள் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகிவிட்டது, சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டு சான்றிதழ் வாங்கியுள்ளது படக்குழு, இந்த சென்சார் சான்றிதழை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி கிடக்கிறார்கள், ஆம் என் என்றால் படத்திற்கு கிளீன் “U” சான்றிதழ் கிடைத்துள்ளதாம் அதனால் தான் இந்த ஷாக்.
இயக்குனர் சந்தோஷ் படத்திற்கு “U” சான்றிதழா.? இருக்கவே இருக்காது அப்படி இருக்க சான்ஸ் இல்லையே.? என வடிவேலு பாணியில் மீம்ஸ்களை பறக்க விட்டு வருகிறார்கள், படத்தின் கதை கண் முன்னே நடக்கும் விஷயங்களை மறந்து போகும் ஹீரோ, அவரை காதலித்து சுற்றும் ஹீரோயின், இவர்களுக்கும் நடக்கும் குட்டி கலாட்டாவை காமெடியாக கூறியுள்ளார் இயக்குனர்.
