உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கெத்து படம் சமீபத்தில் வெளிவந்தது. இந்தப் படத்துக்கு தணிக்கைகுழு யு சான்றிதழ் கொடுத்தும், கெத்து என்பது தமிழ் வார்த்தை அல்ல என்று கூறி வரிவிலக்கு கொடுக்க தமிழக அரசு மறுத்துவிட்டது. இதை எதிர்த்து உதயநிதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம். கெத்து தமிழ் வார்த்தைதான் இதுகுறித்து தமிழக அரசு விளக்க அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதிகம் படித்தவை:  வேதாளம் டைம்ல எங்க இருந்திங்க??? - அஜித் ரசிகர்களிடம் மாட்டிகொண்ட உதயநிதி

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கில், கெத்து என்கிற வார்தையை ஆங்கிலத்தில் குறிப்பிடும்போது கே என்கிற முதல் எழுத்துக்கு பதிலாக ஜி என்று குறிப்பிட்டுள்ளனர். கெத்து என்பது தமிழ் வார்த்தை கிடையாது. என்று கூறினார். பதில் மனு தாக்கல் செய்த மண்டல தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனரும், கெத்து தமிழ் வார்த்தை இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 29ந் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்தது. அரசின் சார்பில் வரிவான பதில் அளிக்கவும் உத்தரவிட்டது.