fbpx
Connect with us

ஆயுத எழுத்து சூர்யா ரோலுக்கு இன்ஸபிரேஷன் இவன்- ஜார்ஜ் ரெட்டியின் பயோபிக் ட்ரைலர் வெளியானது

Videos | வீடியோக்கள்

ஆயுத எழுத்து சூர்யா ரோலுக்கு இன்ஸபிரேஷன் இவன்- ஜார்ஜ் ரெட்டியின் பயோபிக் ட்ரைலர் வெளியானது

1970, மேல்நிலை படிப்புக்காக ஹைதராபாத்தில் உள்ள ‘உஸ்மானியா பல்கலைக்கழகத்தில்’ (Oshmaniya University) சேர்ந்தவர் தான் ஜார்ஜ் ரெட்டி. இயற்பியல் ஆராய்ச்சி மாணவர். படிப்பில் தங்க மெடல் பெற்றவர், அதேசமயம் ப்ரொபஷனல் பாக்ஸராகவும் சாதித்தவர்.

பல்கலைக்கழகத்தில் மதத்தால், இனத்தால், மொழியால் நிலவிய சூழல், அவரை மிகவும் கவலைக்குள்ளாக்கியது. தன் சக மாணவர்களிடையே மார்க்சிய தத்துவங்களை பேச ஆரம்பித்தார். முதலில் மாணவர்களிடம் ஆரம்பித்த இவரின் புகழ் மக்களிடமும் ரீச் ஆக தொடங்கியது.

ஏப்ரல் 14, 1972 அன்று, மாணவர் விடுதியில் அரசியல் அமைப்புகளின் அடியாட்களால் கொல்லப்பட்டார். 40 முறைக்கும் மேல் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். தன்னுடைய 25-வது வயதிலேயே உயிரை விட்ட இவரின் நினைவாக தான் PDSU என்ற முற்போக்கு ஜனநாயக மாணவர்கள் சங்கம் உருவாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தீப் குமார் ஜார்ஜ் ரெட்டி ரோலில் நடிக்கிறார். ஜீவன் ரெட்டி இப்படத்தை இயக்குகிறார். மணிரத்தினத்தின் ‘ஆயுத எழுத்து’ மைக்கேல் (சூர்யா) கதாபாத்திரம், ‘ஜார்ஜ் ரெட்டியை’ மையப்படுத்தியே உருவாக்கப்பட்டது.

ட்ரைலர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top