வைரலாகுது கையில் அடிபட்ட நிலையிலும் வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் போடும் ஜெனிலியாவின் வீடியோ

ஜெனிலியா டி சோஸா அவ்வளவு எளிதில் தமிழ் சினிமா மறக்கக்கூடிய பெயர் கிடையாது. இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் படத்தின் வாயிலாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். ஹிந்தி மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் இவரின் பாய்ஸ் ஹரிணி, சச்சின் ஷாலினி, சந்தோஷ் சுப்ரமணியன் ஹாசினி, உத்தமபுத்திரன் பூஜா இன்றும் ரசிகர்களின் பாவரிட் தான். கடந்த 2012 இல் தன் காதலன் ரித்தேஷ் தேஷ்முக்கை மணந்து திரைத்துறையை விட்டு விலகிவிட்டார். இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் மாஸ்டர் விஜய் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஜெனிலியா மற்றும் நண்பர்களின் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகின்றது.

மேலும் உனது வெற்றியை கொண்டாடுவதற்காக விஜய் இது என சமர்ப்பணம் செய்துள்ளார். சமீபத்தில் ஸ்கேட்டிங் கற்றுக்கொள்ளும் சமயத்தில் தான் இவருக்கு கையில் அடிபட்டது.

https://www.youtube.com/watch?v=vG92Pm8XbuA