கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நாயகன்களில் ஒருவரான அதர்வா முரளி தற்போது சொந்த தயாரிப்பில் ‘செம போதை ஆகாதே’ என்ற படத்திலும், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரித்து வரும் ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை 7ஜி சிவா பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த படத்தை ஓடம் இளவரசு இயக்கியுள்ளார். அதர்வா, ரெஜினா, ப்ரணிதா, சூரி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆனந்தி, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்