Photos | புகைப்படங்கள்
வைரலாகுது ப்ளாக் பனியன் ஜீன்ஸ் ஸ்கர்ட் என அசத்தும் காயத்ரி ஷங்கரின் போட்டோ
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் வாயிலாக நடிக்க வந்தவர் காயத்ரி. ஹீரோயின் தான் என்றில்லாமல் அணைத்து வகை ரோல்களையும் ரசித்து நடிப்பவர். சூப்பர் டீலக்ஸ் படத்தில் அழுத்தமான கதாபாத்திரம் ஆகட்டும், கே 13 படத்தில் கெஸ்ட் ரோல் ஆகட்டும் இவர் சிம்பிலி சூப்பர் தான்.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் காயத்ரி மேக்கப்போடு இருக்கும்போது அவரை பார்த்து, ப்ப்ப்பா! யார் இந்த பொண்ணு பேய் மாதிரி மேக்கப் போட்டிருக்கிறது என விஜய் சேதுபதி சொன்ன வசனம் இன்று வரை இவருடன் தொடர்கிறது.
படத்தில் ஹோம்லி ரோல்களில் நடிக்கும் இவர் போட்டோ ஷூட்களில் பலரையும் ஆச்சர்ய பட வைப்பார். இன்ஸ்டாகிராமில் இவரது பக்கம் செல்பவர்களுக்கு அது நன்கு தெரியும்.

gayathrie shankar
சமீபத்தில் இவர் பதிவிட்ட இந்த போட்டோஸ் அதிக லைக்ஸ் குவித்து வருகிறது.

gayathrie shankar
சிம்பிள் ஆக இருக்கும் இந்த போட்டோஸ் சூப்பர் ஆகவும் உள்ளது என்கின்றனர் நெட்டிசன்கள்.
