பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான காயத்ரிரகுராம் விவாகரத்தான பெண்களின் நிலை குறித்து சமீபத்தில் அவர் பேசி இருக்கும் விஷயங்கள் மக்களின் கவனத்தை பெற்று வருகிறது. காயத்ரி ரகுராம் தற்போது அதிமுக கட்சியில் இருக்கிறார். இவர் முன்னாள் பிஜேபியில் இருந்தார். மேலும் படங்களில் ஏராளமாக நடித்துள்ளார்
இந்த நிலையில், இவர் சமீபத்தி அளித்த பெட்டியில், இவர் கூறியிருக்கும் விஷயங்கள் மக்களின் கவனத்தை பெற்று வருகிறது. விவாகரத்து செய்த பெண் என்றால், சமூகத்தில் அவர்களுக்கு பெரிய பாதுகாப்பு இருக்காது. அதுதான் உண்மை. ஒன்று, அவர்கள் அணுகுவதற்கு எளிதாக இருப்பார்கள். இன்னொன்று, அவர்களை நாம் ஈசியாக தாக்கி விடலாம் என்ற நினைப்பு ஆண்கள் மத்தியில் நிலவும்.
எல்லோருக்கும் அமைவதில்லை
இதில், அந்தப்பெண்ணின் கேரக்டர் பற்றிய அவதூறு பேச்சு உள்ளிட்ட பல விஷயங்கள் அடங்கும். அட்ஜஸ்மென்டை பொறுத்த வரை, அது சினிமாத்துறை மட்டுமல்ல. பல்வேறு துறைகளிலும் இந்த பிரச்சினை இருக்கிறது. ஒரு பெண் விவாகரத்து செய்து விட்டு வந்து விட்டால், உடன் இருக்கும் நண்பர்களே அவளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.
நமக்குள்ளும் நிறைய குழப்பங்கள் வரும். ஒரு பக்கம் துணை வேண்டும் என்று தோன்றும். இன்னொரு பக்கம் துணை வேண்டுமா என்று தோன்றும். இப்போதுதான் இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தோம். மீண்டும் நாம் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? என்று நினைப்பு வரும்.
இதில் இரண்டாவது திருமணம் என்பது, சில பேருக்கு அமையும். சில பேருக்கு அமையாது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். அப்படிப்பட்டபெண்களை நான் செல்ஃப் கிங் என்று அழைப்பேன். நான் இனி கல்யாணமே செய்து கொள்ள மாட்டேன். நான் தோளில் சாய்ந்து ஆறுதல் தேடுவதற்கு கடவுள் இருக்கிறார்” என்று பேசினார்.
என்னதான் இவர் அரசியலில் மாறி மாறி ஆட்டம் காட்டினாலும், ஒரு நடிகையாக இவரை பலருக்கு பிடிக்கும். இந்த நிலையில் பலர் இவரை பாராட்டி வருகின்றனர்.