அவுத்துப் போட்டு நடிக்கும் கூத்தாடிகள்.. காயத்ரி ரகுராமை சோசியல் மீடியாவில் தரக்குறைவாக பேசிய பிரபலம்

காயத்ரி ரகுராம் பல வருடங்களாக இருந்த கட்சியிலிருந்து விலகிய பின், அந்தக் கட்சியில் மகளிர் அணி எங்கே? ஒருவரின் தனிப்பட்ட கருத்துக்காக வெறுப்பு பரப்புவது கொடுமையிலும் கொடுமை என அந்தக் கட்சியை குறித்தும் கட்சியின் தமிழக தலைவர் குறித்தும் சோசியல் மீடியாவில் காட்டமான பதிவுகளை பதிவிடுகிறார்.

சார்லி சாப்ளின் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான காயத்ரி ரகுராம், அதன் பிறகு நிறைய படங்களில் டான்ஸ் மாஸ்டராகவும் பணிபுரிந்து இருக்கிறார். அதன் பின் 2014 ஆம் ஆண்டு மத்தியில் ஆளும் கட்சியில் இணைந்து, தமிழ்நாட்டின் கலைஞருக்கான செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். இப்படி 8 வருடங்களாக மூத்த உறுப்பினராக கட்சியில் இருந்த காயத்ரி ரகுராம் சமீபத்தில் அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

Also Read: சூர்யாவை நாய் என்று மறைமுகமாக குறிப்பிட்டாரா காயத்ரி? சர்ச்சையை கிளப்பிய பதிவு

ஏனென்றால் அவருக்கு எதிராக வார் ரூம் செயல்படுகிறது. கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை, சொந்தக் கட்சி ஆட்களையே கடுமையாக விமர்சனம் செய்கின்றனர், இந்த கட்சியில் இருக்க மாட்டேன் என்று பகிரங்க குற்றச்சாட்டை அடுக்கடுக்காக முன் வைத்தார் . இவருனுடைய இந்த ஆவேசத்திற்கு காரணம் தமிழகத்தில் மத்தியில் ஆளும் கட்சியின் தலைவராக இருக்கும் அண்ணாமலை தான்.

தற்போது அண்ணாமலைக்கும் காயத்ரிக்கும் பனிபோரே நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் சோசியல் மீடியாவில் காயத்ரி ரகுராம் கட்சியை குறித்து கட்சியில் நடக்கும் அவதூறு குறித்தும் அடிக்கடி கருத்து பதிவிட்டு கொண்டிருக்கிறார். இவருடைய இந்த பதிவை பார்த்த அந்தக் கட்சி சேர்ந்தவரும் யூட்யூப்பரான ஜான் ரவி என்பவர் காயத்ரி ரகுராமை தரக்குறைவாக விமர்சித்திருக்கிறார்.

Also Read: பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல.. வீடியோ ஆதாரத்துடன் போலீஸிடம் செல்லும் காயத்ரி ரகுராம்

அவுத்து போட்டு நடிக்கும் கூத்தாடிகள் கூத்து கட்டும் வேலையை மட்டும் பாருங்கள். அட்வைஸ் சொல்ல வேண்டாம் என்று சோசியல் மீடியாவில் ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படத்தை வெளியிட்டு காயத்ரி ரகுராமை தரக்குறைவாக பேசி இருக்கிறார். இவருடைய இந்த தரக்குறைவாக பதிவை பார்த்த காயத்ரி ரகுராம், ‘அக்கா என அழைத்து என் முதுகிற்கு பின்னால் என்னைப் பற்றி மோசமாக பேசி இருக்கிறாய். பொய்யான விஷயத்தை சமூக வலைதளங்களில் பரப்பிக் கொண்டே இருக்கும் உன்னைப் போன்றவர்களுக்கு, பெண்களைப் பற்றிய அவர்களது குறுகிய கருத்து, அவர்களை எல்லாம் வழிநடத்தும் கட்சித் தலைவரின் வார்ரூம் போலவே எனக்கு தெரிகிறது’.

இவர்கள் எல்லாம் எதிர்க்கட்சியுடன் சண்டையிடுவதற்கு பதிலாக இந்த விரட்டியடைந்த முட்டாள்கள் பெண்களுடன் சண்டையிடுகிறார்கள். இது ஜனநாயக நாடு, உணர்ச்சிகளை புண்படுத்தாமல் யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம் என்றும் ஜான் ரவியின் பதிவுக்கு சரமாரியாக காயத்ரி ரகுராம் தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார்.

Also Read: சூர்யா என்றாலே பிரச்சனையை கிளப்பும் பிரபலங்கள்.. தேவையில்லாமல் வம்பிழுக்கும் காயத்ரி ரகுராம்

அதுமட்டுமின்றி ஆடைகள் அல்லது மற்ற ஆண்களுடன் எளிதில் ஒப்பிடும் பெண்ணை நலமாக பேசுவதால் அவமானப்படுவார்கள் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். அது ஒரு மானங்கெட்ட செயல் என்று காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜான் ரவி கருத்துக்கு பதிலடி கொடுத்தார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்