fbpx
Connect with us

Cinemapettai

கொலை மிரட்டல்.. உயிருக்கு அச்சுறுத்தல்.. சென்னை போலீஸ் கமிஷனர் ஆபிஸில் பிரபல நடிகை பகீர் புகார்!

Politics | அரசியல்

கொலை மிரட்டல்.. உயிருக்கு அச்சுறுத்தல்.. சென்னை போலீஸ் கமிஷனர் ஆபிஸில் பிரபல நடிகை பகீர் புகார்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் சார்பில் நடைபெற்ற சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு அண்மையில் நடந்தது.

அப்போது அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். குறிப்பாக அயோத்தி தீர்ப்பு குறித்து விமர்சித்திருந்தார். தொல்லியல்துறை நடத்திய ஆராய்ச்சியில் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம் என்றும் விமர்சித்திருந்தார். அதற்கான வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது.

இந்த வீடியோவை பார்த்து கோபம் அடைந்த பாஜக ஆதரவாளரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் திருமாவளவனை பார்க்கும் இடத்தில் எல்லாம் அடிக்க வேண்டும் என்று ஆவேசமாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டார்.

இதற்குபதிலடியாக காயத்ரி ரகுராமின் வீட்டை விசிக தொண்டர்கள் முற்றுகையிட்டனர். அத்துடன் அவருக்கு எதிராக டுவிட்டர் உள்ளிட்ட உள்ளிட்ட சமுக வலைதளங்களில் கடும்விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்நிலையில் இன்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனு ஒன்றை அளித்தார் காயத்ரி ரகுராம். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலர் போன் மூலமாக தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும், இதனால் தனக்கும் தன்னுடைய வீட்டிற்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top