தமிழிசை மரியாதையை வாங்கி கொடுத்தால் அதுவே பெரும் மகிழ்ச்சி.. இயக்குனர் கெளதமன்

சென்னை விமான நிலையத்தில் இயக்குனர் கௌதமன் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில்,

தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக பதவி ஏற்க உள்ளதை கேட்டு, உண்மையில் மகிழ்ச்சி அடைகின்றோம். மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.

அதே நேரத்தில் நாங்கள் எல்லாம் எதிர்பார்த்த ஒன்றுதான் தூத்துக்குடியில் தோற்றதற்கு பிறகு தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் பல விதமான விமர்சனங்களையும் தாண்டி வந்த சூழலில் அவர்கள் தோல்விக்கு பிறகு நிர்மலா சீதாராமனை போல ராஜ்யசபா எம்பி ஆக்கி பாஜகவில் கேபினட் அமைச்சர் பதவி கொடுப்பார்கள் என்று தமிழகம் எதிர்பார்த்தது அப்படி செய்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆனாலும்கூட கவர்னர் பதவி என்பது கிடைத்துள்ளது. இந்த பதவியை நேர்மையாகவும் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கக் கூடிய வகையில் நடந்து கொண்டால் இன்னும் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும்.

தமிழ்நாட்டில் கத்தி கதறி ஒப்பாரி விட்டு 7 பேர் விடுதலைக்காக இன்னும் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் கூட அதை கண்டுக்காமல் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் போல் இல்லாமல் தெலுங்கானா மக்களுக்கும் சந்திரசேகரராவ் அவர்களுக்கும், தெலுங்கானா மண்ணுக்கும் மக்களுக்கும் என்ன என்னவெல்லாம் நல்லது செய்ய முடியுமோ அதனை தமிழிசை செய்ய வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு மரியாதையை வாங்கி கொடுத்தால் அதுவே பெரும் மகிழ்ச்சி என கூறினார்.

Leave a Comment