Connect with us

Cinemapettai

பீல் பண்ணனும்! கவுதம் மேனன் வெறித்தனமான சவால்

surya

பீல் பண்ணனும்! கவுதம் மேனன் வெறித்தனமான சவால்

இயக்குனர் கவுதம் மேனனுக்கும் துருவா ஸ்க்ரிப்டுக்கும் ரொம்பவே எமோஷனல் பாண்டிங் உண்டு. இந்த துருவா படத்தின் மூலம்தான் சூர்யாவுக்கும் கவுதம் மேனனுக்கும் இடையே பெரிய வார்த்தை போரே நடந்தது.
இன்றைக்கு சூர்யா அப்படி அறிக்கை எல்லாம் விட்டு இருக்கக்கூடாதுன்னு பீல் பண்ற அளவு இருவருக்குள்ளேயும் ஒரு சண்டை.
அப்படிப்பட்ட அந்த ஸ்க்ரிப்டை இத்தனை வருஷம் கழித்து, விக்ரம் ஹீரோவாக அட்டகாசமாக ஒரு ஸ்பை படமாக வெறித்தனமாக செதுக்குகிறார் கவுதம் மேனன்.

நேற்று வெளியிட்ட டீசரில் ஒரு ஜேம்ஸ் பேண்ட் போல விக்ரம். லோக்கல் கலீஜ் வார்த்தைகள் பேசிக்கிட்டு, சான்ஸே இல்லை, இப்படி ஒரு கூல் உளவாளி.
இதுவரை வந்த எல்லா கவுதம் மேனன் படத்துக்கும் இதுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறதை பார்ப்பீங்க. ஒரு இன்டர்நெஷனல் லெவல் படமாக, பெண்டாஸ்டிக் கவுதம்ன்னு டீசர் பார்த்தே சொல்லும்படி மேக்கிங் ஸ்டைலே சூப்பர் பண்ணி இருக்கார்.
சூர்யாவுக்கு காக்க காக்க படத்தில் தான் ஒரு ஸ்டைலிஷ் ஹீரோவாக மாற கவுதம் கற்று தந்தார். அதன் பின் வாரணம் ஆயிரம் கம்ப்ளீட் ஸ்டைலிஷ் லுக், வாக் என்று கவுதம் சூர்யாவுக்கு கற்றுத்தந்தார்.

ஆனால், துருவாவில் சூர்யா கவுதமை காயப்படுத்தியதற்கு, இப்போ கவுதம் மருந்திட்டு கொள்ளும் தருணமாக  விக்ரம் நடிக்கும் துருவநட்சத்திரம் டீசர் மிளிர்கிறது.

இதுவரை 10 லட்சம் பேர் அந்த டீசரை பார்த்து இருக்காங்க. சூர்யா மிஸ் பண்ணிட்டோமேன்னு பீல் பண்ணனும்னு உழைக்கும் கவுதம் என்ற படைப்பாளியை இந்த படம் கைவிடாதுன்னு கோலிவுட் கிசுகிசுக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top