யோகி பாபுவின் இந்தக் கதாபாத்திரத்தை பார்த்து மிரண்டு போன கௌதம் மேனன்.. குவியும் பட வாய்ப்பு!

தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் கவுதம் மேனன். இவர் படத்தில் நடிப்பதற்காக பல பிரபலங்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் யோகி பாபு, ஷீலா ராஜ்குமார் போன்ற பிரபலங்கள் நடிப்பில் OTT தளத்தில் வெளிவந்த மண்டேலா படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

எதார்த்தமான நடிப்பில் யோகிபாபு மிகச் சிறப்பாக நடித்திருப்பார். கண்டிப்பாக இவருக்கான சிறந்த நடிகருக்கான விருது காத்துக் கொண்டு தான் இருக்கின்றது.

இந்த படத்தை பார்த்துவிட்டு கௌதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியது மட்டுமில்லாமல் வரும் காலங்களில் யோகிபாபுவுடன் வேலை பார்ப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

யோகிபாபு மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். சலூன் கடை வைத்து கிராமத்தில் ஒரு மனிதனாக கூட மதிக்கப்படாத ஒருவரின் வாழ்க்கையை வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கும்.

yogi babu in mandela

கௌதம் மேனன் ட்விட்டர் பதிவிற்கு யோகி பாபு ‘நன்றி கௌதம் மேனன் சார்’ என்று பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு காமெடி நடிகருக்கு முழு நடிகருக்கான அங்கீகாரம் கிடைத்திருப்பது யோகி பாபு ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம் தான்.

yogi-babu-twit
yogi-babu-twit
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்