இயக்குனர் கவுதம் மேனன் தன் ஒன்டிராகா எண்டெர்டைன்மெண்ட் சார்பில் “வீக்கெண்ட் மச்சான்” என்ற சீரியலை தயாரிக்கிறார் .பதட்டப்படாதீங்க இது எந்த டீவிலயும் வெளியாகப்போவதில்லை. இது வெப் சீரிஸ் (web series)  வகையறா. அதாங்க சமூக வலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி .

ஒன்றாக ரூம் எடுத்து தங்கிக்கொண்டு, கார்ப்பரேட் கம்பெனியில் வேலைப் பார்க்கும் நான்கு பாச்சிலர்களின் கதை . இதனை சமீர் சுல்தான் என்பவர் இயக்குகிறார்.

இதன் டீஸர் நேற்று யுடியூபில் வெளியானது. இதனை பலரும் தங்கள் பேஸ் புக், ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்:பாலாஜி மோகன் ஸ்டைலில், நம்ம கௌதம் மேனன் இறங்குகிறார் என்றால், இதில் நிறைய பணம் சம்பாரிக்க முடியும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை .