கௌதம் மேனனுக்கும் தமிழ் சினிமா நடிகர்களுகும்தான் ஆகாதுன்னு பார்த்தா இப்ப டைரக்டரும் அந்த லிஸ்ட்ல வந்துட்டாங்க. அவர் படம் மட்டுமில்ல அவர் தயாரிக்கற படமும் ரிலீஸ் ஆகுமா ஆகாதான்னு கேள்விகுறியாவே இருக்கு.

அண்மையில் நடந்த ட்விட்டர் மோதல்கள் மற்றும் வேறு சில குழப்பங்களைபற்றி கௌதம் மேனன் தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதன்படி என்னென்ன நடந்தது என்று அவர் விளக்கியுள்ளார். அதில், நரகாசுரன் படத்திற்கு கார்த்திக் நரேனுக்கு தேவையான அனைத்தையும் நானும் என் குழுவும் செய்துகொடுத்தோம். இப்படத்தில் நான் எந்த விதத்திலும் பங்குதாரர் இல்லை.

கார்த்திக் நரேனுக்கு நான் இந்த படத்தை விட்டு வெளியேற வேண்டுமானால் அதை நான் முழு மனதோடு செய்வேன் என்று தெரிவித்துள்ளார். அடுத்ததாக, துருவநட்சத்திரம் மற்றும் என்னை நோக்கி பாயும் தோட்டா படங்களின் படப்பிடிப்பு முடியவில்லை. அது முடிந்த பிறகு இவ்வருடத்திற்குள் வெளியிடுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அதற்கு நான் ஒரு வழிகாட்டியாகவே இருந்தேன் என்றும் கூறியுள்ளார். இறுதியில், கார்த்திக் நரேனுடனான கருத்து வேறுபாடு சரிசெய்யப்பட்டதாகவும், படத்தின் வெளியீட்டை நோக்கி வேலைகள் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்ப அந்த வரிசையில் அரவிந்த் சாமியும் வந்துவிட்டார். இன்னும் யார் யாரெல்லாம் தலை தெறிக்க ஒடராங்கனு பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here