தனுஷ் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் துருக்கியில் நடந்து முடிந்தது.

இப்படம் குறித்து இயக்குனர் கௌதம் மேனன் கூறுகையில் ‘தனுஷ் ஏன் சிறந்த நடிகர் என்று எல்லோரும் சொல்கிறார்கள் என தற்போது அவருடன் பணிப்புரியும் போது தான் தெரிகின்றது.

அவர் ஆக்‌ஷன் காட்சிகள் எல்லாம் மிக எளிமையாக செய்கிறார், நான் அவரிடம் சொல்லியிருக்கிறேன், “சார், உங்களுக்குள் ஒரு புருஸ்லீ இருக்கிறார்” என்று’ என கலகலப்பாக கௌதம் கூறியுள்ளார்.