இயக்குனர் கௌதம் மேனன் எப்போதும் வித்தியாசமான படைப்புக்களை இயக்கி வருபவர். தற்போது தனுஷுடன் இணைந்து என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தை இயக்கி வருகிறார்.இந்நிலையில் இவரின் அடுத்த படத்தின் பெயர் ‘ஒன்றாக’. இதில் தென்னிந்தியாவின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் 4 மொழிகளில் இருந்தும் ஹீரோக்களை தேர்ந்தெடுத்துள்ளாராம்.

பிருத்விராஜ், புனித்ராஜ்குமார், சாய் என மூன்று ஹீரோக்கள் கமிட் ஆக தமிழில் பெரும்பாலும் ஜெயம் ரவி இருப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அனுஷ்கா, தமன்னா ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளனர். 2 ஹீரோயின்கள் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.4 நண்பர் ஒன்றாக சுற்றுலா செல்லும் போது ஏற்படும் நிகழ்வுகள் தான் இந்த படத்தில் கதை என சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.