fbpx
Connect with us

Cinemapettai

விக்டர் அருண் விஜய் போன்று மிரட்டலான ரோலில் வரும் பிரபல நடிகர்.. கௌதம் மேனன் வில்லனுக்கு தனி கெத்துதான்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விக்டர் அருண் விஜய் போன்று மிரட்டலான ரோலில் வரும் பிரபல நடிகர்.. கௌதம் மேனன் வில்லனுக்கு தனி கெத்துதான்!

மார்க்கெட் இல்லாத நடிகர்கள் வில்லனாக களமிறங்கும் சீசன் தொடங்கி விட்டது போல. சினிமாவில் பெரிய அளவு ஹீரோவாக சோபிக்க முடியாத நடிகர்கள் வில்லனாக கலக்கி வருகின்றனர்.

அந்த வகையில் நீண்ட நாட்களாக ஒரு ஹிட் கூட கொடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த அருண் விஜய்க்கு என்னை அறிந்தால் படத்தில் விக்டர் எனும் கதாபாத்திரத்தை கொடுத்து தூக்கி விட்டார் கௌதம் மேனன்.

தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களின் அனைத்து படங்களிலும் வில்லன் நடிகருக்கு முதல் சாய்ஸ் அருண் விஜய் தான். தமிழில் ஹீரோவாகவும் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் கழுகு, யாமிருக்க பயமே போன்ற சில வெற்றிப் படங்களை மட்டுமே கொடுத்து தோல்வி நடிகர்களின் வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் கிருஷ்ணா. தனுஷின் மாரி 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் கௌதம் மேனன் படத்தில் இந்த இளம் நடிகரை வில்லனாக களம் இறக்க உள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ஜோஸ்வா இமைபோல் காக்க. வரும் என்று நடிகர் நடித்துள்ளார்.

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்திருக்கும் இந்த படத்தின் வில்லன் டீசர் இன்று வெளியிடப்பட்டது. அதில் இதுவரை இல்லாத அளவுக்கு மிரட்டலாக நடித்துள்ளார் கிருஷ்ணா.

இனிவரும் காலங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாகவும் இவரை அடிக்கடி பார்க்கலாம். அருண் விஜய் போல இவருக்கும் கேரியர் பிக்கப் ஆக வாழ்த்துக்கள்.

Continue Reading
To Top