Tamil Cinema News | சினிமா செய்திகள்
கௌதம்மேனன் எடுக்கும் ரிஸ்க்.. இந்த படம் ஹிட் ஆகலனா டைரக்டர் வாழ்க்கையை மூட்டை கட்டிவிட வேண்டியதுதான்!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சென்சேஷனல் இயக்குனராக வலம் வந்த கௌதம் மேனன் தற்போது ஒரு வெற்றிப்படம் கொடுக்கவே தடுமாறிக் கொண்டி ருக்கிறார்.
சமீபத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை நோக்கி பாயும் தோட்டா படம் படுதோல்வியை சந்தித்து தனுஷ் கேரியரில் இதுவரை இல்லாத அளவுக்கு தோல்வியை கொடுத்தது.
இது ஒருபுறமிருக்க விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான துருவ நட்சத்திரம் படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.
அந்த படத்தின் ட்ரெய்லர், டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் வெளியீடு இழுத்துக் கொண்டே செல்வது நல்லதில்லை என்கிறது கோலிவுட்.
இந்நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு புதிய ரிஸ்க் ஒன்றை எடுக்க உள்ளாராம் கவுதம் மேனன். இதுவரை நகரத்து கதைகளை படமாக்கி வந்த கௌதம் மேனன் முதன்முதலாக முழுக்க முழுக்க கிராமத்து கதையை இயக்க உள்ளாராம்.
இந்த படத்தில் முன்னணி ஹீரோ ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இந்த படம் மட்டும் ஹிட் ஆகவில்லை என்றால் டைரக்டர் வாழ்க்கையை மூட்டை கட்டிவிட்டு நடிகராக தொடர்ந்து விடலாம் என முடிவெடுத்து விட்டாராம்.
