Tamil Cinema News | சினிமா செய்திகள்
போதும்டா சாமி இயக்குனராக குப்பை கொட்டியது.. ரூட்டை மாற்றிய கவுதம்மேனன்
சமீபகாலமாக இயக்குனர்கள் நடிகர்களாக களம் இறங்கி கலக்க ஆரம்பித்து விட்டனர். அந்தவகையில் சமுத்திரகனி, கேஎஸ் ரவிக்குமார் ஆகியோரை தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனனும் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார்.
விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகிவரும் எப்ஐஆர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து நிறைய தமிழ் படங்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் வில்லன் நடிகர்களுக்கு டப்பிங் செய்தும் வருகிறார்.
தற்போது தன் தாய்நாடான கேரளாவில் நடிகராக களம் இறங்க உள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு பகத் பாசில் மற்றும் நஸ்ரியா நடித்த டிரான்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளிவந்தது.
சமீபகாலமாக கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவின. பெரிதும் எதிர்பார்த்த என்னை நோக்கி பாயும் தோட்டா வரை அதலபாதாளத்தில் தள்ளியது. தற்போது ஜோஷ்வா இமைபோல் காக்க எனும் படத்தை இயக்கியுள்ள கௌதம் மேனன் நடிகராகவும் பணம் சம்பாதிக்கலாம் என முடிவெடுத்து விட்டதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிச்ச நாலு காசு பாத்திரலாம் போல, இயக்குனர் பொழப்பு மட்டும் ஆகாது என புலம்பி வருகிறாராம் கவுதம் மேனன்.
