Connect with us

Cinemapettai

நரகாசுரன் OTTயில் வருமா? எனக் கேட்ட கார்த்திக் நரேன்.. வரும் ஆனா வராது என குழப்பிய கௌதம் மேனன்

karthi-gautham-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நரகாசுரன் OTTயில் வருமா? எனக் கேட்ட கார்த்திக் நரேன்.. வரும் ஆனா வராது என குழப்பிய கௌதம் மேனன்

தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குனர் என பெயர் எடுத்தவர் கௌதம் மேனன். பல முன்னணி நடிகர்களுக்கும் சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். தான் வளர்ந்து வரும் நேரத்தில் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார்.

அந்த அவதாரத்தில் சிக்கி மாட்டிக் கொண்ட பல இளம் இயக்குனர்கள் இருக்கின்றன. அதில் மிகவும் முக்கியமாக சிக்கி சீரழிந்தவர்தான் கார்த்திக் நரேன். துருவங்கள் 16, மாபியா போன்ற படங்களில் இயக்குனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

துருவங்கள் பதினாறு படத்திற்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் இரண்டாவது படமாக உருவாகியது நரகாசுரன். அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா போன்ற நடிப்பில் உருவாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அந்த படத்தை கவுதம் மேனன் சொந்தமாக தயாரித்து இருந்தார். படம் முழுவதுமாக முடிந்தும் ரிலீஸில் மாறுதல் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகியும் இந்த படம் வெளியாகவில்லை.

இது குறித்து அவ்வப்போது கௌதம் மேனன் மற்றும் கார்த்திக் நரேன் ஆகிய இருவருக்கும் இடையே அடிக்கடி டுவிட்டரில் மோதல் ஏற்பட்டதை கண்கூடாக பார்க்க முடிந்தது. இந்த விவகாரம் தொடர்பாக நேரடியாகவே கௌதம் மேனனை தாக்கிப் பேசி இருந்தார் கார்த்திக் நரேன்.

தற்போது ott தளங்களில் பல படங்கள் வெளிவரும் நிலையில் நரகாசுரனின் படத்தையும் OTT இல் வெளியிடுமாறு கவுதமிடம் கெஞ்சி வருகிறாராம். கார்த்திக் நரேன் அடுத்ததாக தனுஷ் நடிக்கும் D43 படத்தை இயக்க தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இந்த விவகாரம் முற்றி இருவருக்குமிடையில் கைகலப்பு நடந்து கொண்டால் கூட ஆச்சரியம் இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top