சீக்கிர நடிகருடன் கூட்டணி போடும் கௌதம் மேனன்.. முதன்முறையாக இணைவதால் எகிறும் எதிர்பார்ப்பு

ஒரு காலத்தில் கௌதம் மேனன் படங்களை பார்த்து சிலிர்த்து போன ரசிகர்கள் அனைவருமே தற்போது அவரது படங்களைப் பார்த்து இவர் ஏன் இப்படி எல்லாம் படம் எடுக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது அவரது நிலைமை.

என்னதான் வித்தியாசம் வித்தியாசமாக முயற்சி செய்தாலும் கடைசியில் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அந்த படம் தோல்வி தான். கடந்த சில படங்களாகவே கவுதம் மேனன் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.

ஆனால் தற்போது சிம்புவுடன் இணைந்து அவர் உருவாக்கிவரும் வெந்து தணிந்தது காடு என்ற படம் முற்றிலும் வித்தியாசமாக உருவாகி வருகிறது. இதுவரை கிராமத்து படங்களை எடுக்காத கௌதம் மேனன் முதல் முறையாக முயற்சி எடுத்துள்ளார். மேலும் வெந்து தணிந்தது காடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகி வைரலானது.

sivakarthikeyan-gautham-menon-cinemapettai
sivakarthikeyan-gautham-menon-cinemapettai

அந்த படத்தை முடித்த பிறகு அடுத்ததாக தமிழ் சினிமாவில் தற்போதைக்கு செம மார்க்கெட் உள்ள நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி போடவுள்ளாராம். சிவகார்த்திகேயனுக்கு சீக்கிர நடிகர் என்ற பட்டப்பெயர் கோலிவுட்டில் உண்டு.

அதாவது சினிமாவுக்கு வந்த சீக்கிரத்தில் முன்னுக்கு வந்துவிட்டார் என்பதற்காக அப்படி அழைத்து வருகிறார்களாம். சிவகார்த்திகேயன் தற்போது டான், சிங்கப் பாதை போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை முடித்த பிறகு கௌதம் மேனன் படத்தில் இணைவார் என்றும் கூறுகின்றனர்.

இந்த படத்தை சமீபகாலமாக கௌதம் மேனனை தத்தெடுத்து வளர்த்து வரும் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளதாக கூறுகின்றனர். இதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்