fbpx
Connect with us

Cinemapettai

நெருக்கத்தில் பட்டையை கிளப்பும் ஜோஸ்வா பட ரொமான்டிக் பாடல் வீடியோ.. கௌதம் மேனனின் அடுத்த படைப்பு

Videos | வீடியோக்கள்

நெருக்கத்தில் பட்டையை கிளப்பும் ஜோஸ்வா பட ரொமான்டிக் பாடல் வீடியோ.. கௌதம் மேனனின் அடுத்த படைப்பு

பப்பி படத்தின் வெற்றியை தொடர்ந்து வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நடிகர் வருனை வைத்து தயாரிக்கும் திரைப்படம் ஜோஸ்வா இமைபோல் காக்க. வித்தியாசமான காதல் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார்.

முன்னணி நடிகர்கள் பலரும் கௌதம் மேனனை கைவிட்ட நிலையில் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மட்டும் குத்தகைக்கு எடுத்து விட்டது போல.

இதற்கு முன்னர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி பாதியில் தடுமாறிக் கொண்டிருந்த என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தையும் வாங்கி வெளியிட்டு பலத்த நஷ்டத்தை சந்தித்தது.

இருந்தாலும் தன்னுடைய உறவினருக்காக மீண்டும் கௌதம் மேனனை வைத்து ரிஸ்க் எடுக்க உள்ளது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல். கௌதம் மேனன் இயக்கியுள்ள அடுத்த படத்தின் வீடியோ பாடல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இளைஞர்களை கவரும் வகையில் மிகவும் அமைந்த பாடலாக அமைந்துள்ள இந்த பாடலை பாடகர் கார்த்திக் பாடியுள்ளார். கௌதம் மேனன் படத்தில் வழக்கம் போல் வரும் நெருக்கமான காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

அனைவரும் கௌதம் மேனனிடம் புதுமையாக எதையாவது எதிர்பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில் ஒரே மாதிரி படங்களை இயக்கிக் கொண்டிருப்பது கொஞ்சம் சலிப்பை தருகிறது. இதை மாற்றினால் அவரது கேரியருக்கு நல்லது.

Continue Reading
To Top