fbpx
Connect with us

Cinemapettai

ஹாரிஸ் ஜெயராஜை ஏமாற்றி ஏப்பம் விட்ட பிரபல ஸ்டைலிஷ் இயக்குனர்.. சில வருடங்களாக மறைக்கப்பட்ட ரகசியம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஹாரிஸ் ஜெயராஜை ஏமாற்றி ஏப்பம் விட்ட பிரபல ஸ்டைலிஷ் இயக்குனர்.. சில வருடங்களாக மறைக்கப்பட்ட ரகசியம்

தமிழ் சினிமாவில் ஹாரிஸ் ஜெயராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி என்றாலே அந்தப் படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

இருவரின் கூட்டணியில் உருவான மின்னலே, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால், துருவ நட்சத்திரம் போன்ற படத்தின் பாடல்கள் இன்று வரை பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கிறது.

ஆனால் சில வருடங்களாக இவர்களிடையே சலசலப்பு நிலவி வருகிறது. இருவருக்கும் இடையில் மனஸ்தாபத்தை அவ்வபோது கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

தற்போது வெளியான செய்தியின் படி, கௌதம் வாசுதேவ் மேனன் தனது மின்னலே படத்தின் மூலமாகவே இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜை அறிமுகப்படுத்தி உள்ளார் அந்த உரிமையினால், அடுத்தடுத்த படங்களில் அவருக்கு குறைவான சம்பளத்தை கொடுத்துள்ளார் கௌதம் மேனன்.

ஒரு சில படங்களில் பொறுத்துக்கொண்டு ஹாரிஸ் ஜெயராஜ், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து கூட்டுச் சேர்வதையே நிறுத்தி விட்டாராம்.

உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுத்தால் தானே எந்த இடத்திலும் வேலை பார்க்க முடியும், ஹாரிஸ் ஜெயராஜிற்க்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு உள்ளது.

அதே சமயத்தில் காசு கொடுக்காமல் வேலை வாங்கிய குருநாதர் கௌதம் மேனனின் மீது, இப்படி ஏமாத்திட்டாரே என ரசிகர்கள் ஒரு புறம் திட்டி தீர்க்கின்றனர்.

Continue Reading
To Top