தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாகக் கிடப்பில் கிடந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை தூசி தட்டி எடுக்கிறார் கெளதம் மேனன்.

Dhanush
Dhanush

கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த வருடம் ரிலீஸான படம் ‘அச்சம் என்பது மடமையடா’. சிம்பு, மஞ்சிமா மோகன் இருவரும் ஹீரோ, ஹீரோயினாக நடித்திருந்தனர். இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது சிம்புவுக்கும், கெளதம் மேனனுக்கும் முட்டிக் கொண்டது.

உடனே, அந்தப் படத்தைப் பாதியிலேயே விட்டுவிட்டு, தனுஷை வைத்து ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்க ஆரம்பித்தார் கெளதம் மேனன். மேகா ஆகாஷ், தனுஷ் ஜோடியாக நடித்தார்.

dhanush

அதற்குள் சிம்புவுக்கும், கெளதம் மேனனுக்குமான மோதல் முடிவுக்கு வர, ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை முடித்து, ரிலீஸும் செய்துவிட்டார்.

இந்நிலையில், கெளதம் மேனனுக்கும், தனுஷுக்கும் இடையில் பிரச்னை தொடங்கியது. ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, தர்புகா சிவாவை இசையமைக்க வைத்ததில் கடுப்பானார் தனுஷ்.

dhanush

அத்துடன், தனுஷுக்கு சம்பளமும் கரெக்டாக தராததால், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ துப்பாக்கியில் இருந்து புறப்படாமலேயே நின்று போனது.

சும்மா இருப்பாரா கெளதம் மேனன்? விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தைத் தொடங்கினார். வெளிநாடுகளில் படம்பிடிக்கப்பட்டிருக்கும் இந்தப் படம், இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதை நிறுத்தி வைத்துவிட்டு, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தைக் கையிலெடுக்கப் போகிறாராம் கெளதம் மேனன்.

dhanush

ஒருவழியாக சமாதானத்துக்கு வந்திருக்கும் தனுஷ், அடுத்த மாதம் கெளதம் மேனனுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். எனவே, டிசம்பரில் மீதமுள்ள படத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ள கெளதம் மேனன், தற்போது லொகேஷன் தேடுவதில் பிஸியாக இருக்கிறார்.

எனவே, ‘துருவ நட்சத்திரம்’ படத்துக்கு முன் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸாகிவிடும். இந்தப் படங்களை, கெளதம் மேனனின் ‘ஒன்றாக எண்டெர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது.