Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல தமிழ் வாரிசு நடிகரை மிரட்டி கொள்ளையடித்த இருவர்.. சைக்கிள்ல போனது ஒரு குத்தமாடா?
சிவனேன்னு சைக்கிளில் போய்க் கொண்டிருந்த பிரபல வாரிசு நடிகரை மடக்கி இரண்டு பேர் கொள்ளையடிக்க பார்த்த சம்பவமும் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் நவரச நாயகன் என்ற பெயருடன் வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது மகன் கவுதம் கார்த்திக்.
வளர்ந்து வரும் இளம் ஹீரோவாக இருக்கும் கௌதம் கார்த்திக் காலை உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்காக சைக்கிள் பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.
சென்னையில் உள்ள டிடிகே சாலையில் சென்றபோது திடீரென இருவர் கௌதம் கார்த்திக்கை மடக்கி அவரிடம் செயின், வாட்ச், மோதிரம் என விலை உயர்ந்த பொருள்களை கேட்டு மிரட்டியுள்ளனர்.
அந்த சமயம் கெளதம் கார்த்தி கையில் விலை உயர்ந்த செல்போன் இருந்ததால் அதைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டார்களாம்.
இதனால் பதற்றமடைந்த கௌதம் கார்த்திக் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு புகார் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சினிமாவில் பிரபலமான ஒருவருக்கே இந்த நிலமையா, அப்போ சாதாரண மக்கள் கதி? என மொத்தம் கோலிவுட் வட்டாரமும் உஷாராகிவிட்டதாம்.

gautham-karthik-cinemapettai
