fbpx
Connect with us

Cinemapettai

விஜய்யின் மெகா ஹிட் பட இயக்குனருடன் கைகோர்க்கும் கௌதம் கார்த்திக்.. இந்த படமாச்சு ஹிட் ஆகணும் ஆத்தா!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யின் மெகா ஹிட் பட இயக்குனருடன் கைகோர்க்கும் கௌதம் கார்த்திக்.. இந்த படமாச்சு ஹிட் ஆகணும் ஆத்தா!

நவரச நாயகன் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக். தமிழ் சினிமாவில் பல வருடங்களாக ஹீரோவாக இருந்தாலும் இன்னமும் அவரால் ஒரு மினிமம் கேரண்டி நடிகராக வலம் வர முடியவில்லை.

என்னதான் ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து என அடல்ட் படங்களில் வெற்றியை கொடுத்தாலும் கமர்சியலாக ஒரு வெற்றி தேவைப்படுகிறது.

கொம்பன் முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்த தேவராட்டம் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என எதிர்பார்த்த நிலையில் குறிப்பிட்ட ஏரியாக்களில் சொதப்பியது.

பல முயற்சிகள் எடுத்தும் கௌதம் கார்த்திக் இன்னமும் ஒரு நிலையான வெற்றிப்பட ஹீரோவாக வலம் வர முடியாமல் தவித்து வருகிறார்.

இந்நிலையில் தான் அவருக்கு விஜய் பட இயக்குனர் ஒருவர் கை கொடுத்துள்ளது அவருக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. விஜய்க்கு துள்ளாத மனமும் துள்ளும் என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் எழில்.

இவருடைய அடுத்த படத்தின் நாயகன் கௌதம் கார்த்திக். எழில் தன்னுடைய வழக்கமான கமர்சியல் கதைகளில் இருந்து மாறுபட்டு முழுக்க முழுக்க திரில்லர் அம்சத்துடன் இந்த படத்தை உருவாக்க உள்ளாராம்.

இந்த செய்தி வெளியானவுடன் இந்த படத்தின் மீது இப்பவே ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது மறுக்க முடியாத ஒன்று.

Continue Reading
To Top