Gautham Karthik
Gautham Karthik

மிஸ்டர் சந்திரமௌலி ஆடியோ வெளியீட்டு விழாவில், பேசிய பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் கௌதம் கார்த்திக்கை கோலிவுட்டின் ரன்பீர் கபூர் என பாராட்டி இருக்கிறார்.

Regina Cassandra – Gautam Karthik

90களின் வெற்றி நாயகனாக இருந்த கார்த்திக், சமீபத்தில் தான் கோலிவுட்டில் ரீ – எண்ட்ரி கொடுத்திருக்கிறார். அனேகன் மற்றும் தானா சேர்ந்த கூட்டம் படங்களில் வலுவான கதாபாத்திரத்தை பதித்தவரின் அடுத்த படம் தான் மிஸ்டர் சந்திரமௌலி. இப்படத்தில் முதல்முறையாக கார்த்திக்குடன், அவரது மகன் கௌதம் இணைந்து நடித்துள்ளார். பிரபல இயக்குனர் அகத்தியனின் மருமகனும், இயக்குனருமான திரு இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை தனஜெயன் கோவிந்த் தயாரிக்கிறார். ரெஜினா கஸாண்ட்ரா, வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ், சதீஷ், ஜெகன், விஜி சந்திரசேகர், ‘மைம்’ கோபி, மனோபாலா ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடமேற்று இருந்தனர். சாம் சி எஸ் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

Gautham Karthik

இதை தொடர்ந்து, இப்படத்தின் இசை வெளியீட்டு இன்று நடைபெற்றது. இதில், படத்தின் கலைஞர்கள் உள்பட திரைத்துறையை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய தயாரிப்பாளர் தனஜெயன், முதலில் படத்திற்கு வேறு பெயர் வைக்கப்பட்டு இருந்ததாம். படத்தின் கதையை கேட்ட இயக்குனர் சுசீந்தரன் தான் மிஸ்டர் சந்திரமௌலி என்ற பெயரை வைக்கலாமே என ஐடியா கொடுத்திருக்கிறார். கடைசியில் அதுவே வைரல் ஹிட் அடித்திருக்கிறது.

அதிகம் படித்தவை:  'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் பெயர் எப்படி வந்தது தெரியுமா? மேலும் பல தகவல்கள்.!

தொடர்ந்து, பேசிய இயக்குனர் வெற்றிமாறன் விஷால் இந்த விழாவில் கலந்துகொண்டது திருவுக்காகவா இல்லை வருவுக்காகவா என விஷாலை சீண்டியது அரங்கில் இருந்த அனைவரையையும் சிரிப்பில் ஆழ்த்தியது.

இதற்கு பதில் அளிக்க மேடை ஏறிய விஷால், நான் திருவுக்காகவும், என் நெருங்கிய தோழி வருவுக்காகவும், சிறந்த நடிகர் கார்த்திக்காகவும், அவரது மகன் கௌதம் கார்த்திக்காகவும் தான் வந்தேன் எனக் கூறினார். திரு படத்துல யாராவது தண்ணிக்குள்ள மூழ்கிடுறாங்க. இந்தப் படத்துலயும் ஒரு பாட்டு தண்ணிக்குள்ளேயே இருக்கு என இயக்குனரை கலாய்த்து விட்டு சென்றார்.

அதிகம் படித்தவை:  கனவு நிறைவேறியது! மார் தட்டும் ரோமியோ: ஜெயம் ரவி

இயக்குனர் ஏ.எல்.விஜய் பேசும் போது, கோலிவுட்டின் ரன்பீர் கபூர் போன்று இருக்கிறார் கௌதம் கார்த்திக் என தன் பங்குக்கு புகழாரம் சூட்டினார்.

இதை தொடர்ந்து பேசிய நவரச நாயகன் கார்த்திக், மௌன ராகம் படத்தில் நான் பேசிய வசனம். பிரபலமாகி தற்போது படமாகிறது. அதில் நானும், என் மகனும் நடித்திருப்பதே பெருமையாக இருக்கிறது. கௌதமிற்கு கிடைத்த பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை. என் முதல் படம் அலைகள் ஒய்வதில்லை. ஆனால், அப்படம் வெளியாகி ஒரு மாதத்தில் என் அப்பா இறந்து விட்டா எனக் குறிப்பிட்டார். அப்பாவுடன் என்னால் நடிக்கவே முடியாதோ என நினைத்தான். அந்த ஆசையை இப்படம் தீர்த்து வைத்திருக்கிறது. இப்படத்தில் நான் என் அப்பாவுடனே நடித்து இருப்பதாக நினைக்கிறேன் என்றார். இதை தொடர்ந்து, இப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் மாதவன் மாலை 6 மணிக்கு வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.