சிம்புவின் கேங்ஸ்டார் படத்தில் இணையும் பிரபல வாரிசு நடிகர்.. அடேங்கப்பா.! மிரட்டலா இருக்குமே

திரையுலகில் எஸ்டிஆர் சிம்புவிற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரைப் பற்றிய ஏதேனும் ஒரு செய்தி வந்தால் அது உடனே ட்ரெண்டிங் ஆகவிடும். அதேபோல இப்போது சிம்புவின் பத்துதல திரைப்படம் தான் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் இதில் சிம்புமுக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய மப்டி திரைப்படத்தின் ரீமேக்தான் பத்து தல. இத்திரைப்படத்தை இயக்குனர் கிருஷ்ணா இயக்குகிறார்.

அவர் ஜில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர். முதன்முதலாக கௌதம் கார்த்திக்கும், சிம்புவும் இணைந்து இப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

கௌதம் கார்த்திக் கடல் திரைப்படம் மூலமாக ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது சிறிய இடைவேளைக்கு பின்  சிம்புவுடன் இணைகிறார். சிம்பு ஒரு கேங்ஸ்டார் தலைவனாகவும், கௌதம் கார்த்திக் போலீசாக நடிக்கிறார்கள்.

கௌதம் கார்த்திக் புகைப்படங்களை வெளியிட்டு தான் காத்திருந்ததற்கு வாய்ப்பு இப்போது கிடைத்து விட்டது, என்னுடைய புதிய பயணத்தை தொடர்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

gautham-karthick
gautham-karthick

பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் கிருஷ்ணா இந்த திரைப்படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏ ஆர் ரகுமான் அவர்கள் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது ரசிகர்களுக்கு மற்றும் ஒரு பெரிய விருந்தாக அமைகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்