புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

கௌதம் கார்த்திக்கும் அந்த நடிகைக்கும் கல்யாணமா? அவங்க சிம்பு ஜோடியாச்சே!

தமிழ் சினிமாவின் வாரிசு நடிகர்களில் ஒருவர் கௌதம் கார்த்திக். பிரபல நடிகர் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன். கௌதம் கார்த்திக் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் இருந்தாலும் இன்னமும் தனக்கான இடத்தை தேடிக் கொண்டுதான் இருக்கிறார்.

சினிமாவில் தனக்கான இடத்தை உறுதி செய்தாரோ இல்லையோ தன்னுடைய வாழ்க்கையில் அடுத்தது யார் துணை என்பதை உறுதி செய்து விட்டார் என்கிறது சினிமா வட்டாரம். கௌதம் கார்த்திக்கும் பிரபல நடிகைக்கும் விரைவில் திருமணம் என்ற செய்திதான் இன்றைய இணையதள ஹாட் டாபிக்.

கௌதம் கார்த்திக் முத்தையா இயக்கத்தில் தேவராட்டம் என்ற படத்தில் நடித்தார். தேவராட்டம் திரைப்படம் சக்கை போடு போட்டு வசூலில் வேட்டையாடியது. அந்த வகையில் கௌதம் கார்த்திக்கின் சினிமா கேரியரில் அந்த படமும் வெற்றிப்படமாக அமைந்து விட்டது.

தேவராட்டம் படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடித்தவர் மஞ்சிமா மோகன். பிரபல மலையாள நடிகையான இவர் சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அறிமுக படமே சூப்பர்ஹிட் என்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தது.

தேவராட்டம் படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும் தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளதாகவும் ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இருவரது தரப்பில் விசாரித்தபோது இந்த செய்தி உண்மையில்லை என்பது போலவே கூறினர்.

ஆனால் அவர்களின் நெருங்கிய வட்டாரங்களில் இருவரும் காதலிப்பது உண்மைதான் எனவும் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திருமணத்திற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறுகின்றனர். அஜித் ஷாலினி சூர்யா ஜோதிகா சினேகா பிரசன்னா ஆகியோர் வரிசையில் நட்சத்திர ஜோடிகளாக கௌதம் மஞ்சிமா மோகன் இருக்கலாம்.

- Advertisement -

Trending News