Tamil Cinema News | சினிமா செய்திகள்
சம்பளத்தை இரண்டு மடங்காக ஏற்றிய கௌதம் கார்த்திக்.. யாருமே இல்லாத கடையில யாருக்குப்பா டீ ஆத்துற!
தமிழ் சினிமாவுக்கு வந்த வாரிசு நடிகர்களின் சமீபகாலமாக இளம் பெண்களின் மனதை கவரும் நடிகராக வலம் வருபவர் கௌதம் கார்த்திக். இருந்தும் அவரால் பெரிய அளவு வெற்றி படங்களை கொடுக்க முடியவில்லை. நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடலென்ற மணிரத்தினம் காவியத்தில் அறிமுகமாகியிருந்தாலும் அந்த படம் விருது வாங்குவதற்கு தான் சரியாக இருந்ததே தவிர வசூல் செய்யவில்லை என்பது ஒரு சோகம்.
தொடர்ந்து வை ராஜா வை, என்னமோ ஏதோ, முத்துராமலிங்கம் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை பெருமளவு கவர முடியவில்லை. அதனால் அடல்ட் திரைப்படங்களின் பக்கம் திரும்பிய கௌதம் கார்த்திக் வசூல் குவிந்தது.
கௌதம் கார்த்திக் நடித்த அடல்ட் படங்களான ஹர ஹர மஹாதேவகி மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்கள் வசூல் ரீதியாக பெரிய அளவு ஹிட் அடித்தாலும் விமர்சனரீதியாக படு மோசமான விளைவுகளை சந்தித்தது.
சமீபத்தில் வந்த தேவராட்டம் படமும் சாதியை மையப்படுத்தி வந்ததால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே வசூல் செய்தது. பெரும்பாலான இடங்களில் தோல்வியையே தழுவியது. இப்படி இருக்கும் நிலையில் பட வாய்ப்புகள் வருவதே அரிது.
அப்படி வரும் பட வாய்ப்புகளுக்கு இதுவரை ஐம்பது லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த கௌதம் கார்த்திக் தற்போது ஒரு கோடி சம்பளம் கேட்டு அடம் பிடிக்கிறாராம். போனா போகுதுன்னு வாய்ப்பு கொடுத்தால் நம்மளையே மொட்டையடிக்க பார்க்கிறார் என தயாரிப்பாளர்கள் பின் வாங்குகிறார்களாம்.
