பாஜக வில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர். போட்டோ உள்ளே.

Gautham Gambhir கவுதம் கம்பிர் – இந்தியாவின் சிறந்த துவக்க பேட்ஸ்மேன்களில் இவரும் ஒருவர். டி 20 , ஒரு நாள் போட்டி, டெஸ்ட் என அனைத்து வித போட்டிகளிலும் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் கலக்கியவர். சிறந்த வீரராக இருப்பினும், நேர்பட பேசுபவர். தவறு செய்வது யாராயினும் சுட்டிக்காட்ட தயங்காதவர். அதன் காரணமாகவே இவர் பல நேரங்களில் கிர்க்கிட் பாலிடிக்சில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளார்.

சென்ற ஐபில் சீசனில் தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று டெல்லியின் கேப்டன் பதவியை கம்பிர் ராஜினாமா. தன் ஒய்வையும் பின்னர் அறிவித்தார் வீடியோ வாயிலாக. அதன் பின்னர் கமென்டரி, கிரிக்கெட் அலசல் என்று இருந்து வந்தவர்.

Gautham Gambhir

பல நாட்களாகவே இவர் அரசியலில் என்ட்ரி ஆகிறார் என்ற பேச்சு அடி பட்டு வந்தது. அது இன்று உறுதியாகி உள்ளது.

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் ரவி ஷங்கர் பிரசாத் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். நரேந்திர மோடியின் கொள்கை பிடித்ததால் இணைந்ததாகவும் சொன்னார்.

அதுமட்டுமன்றி பின்னர்  கட்சியின் பிரேசிடண்ட் அமித் ஷா அவர்களையும் சந்தித்துள்ளார்.

Gautham Gambhir

ட்விட்டரில் ஒரு புறம் பாராட்டும் ஆதரவும், மறுபுறம் கிண்டல் கேலி என கலை கட்ட துவங்கியுள்ளது.

Leave a Comment