fbpx
Connect with us

அரசியலுக்கு வரும் கவுதமி..! ஆனால் யாருடன் வருகிறார் தெரியுமா?

gautami

News / செய்திகள்

அரசியலுக்கு வரும் கவுதமி..! ஆனால் யாருடன் வருகிறார் தெரியுமா?

நடிகை கவுதமி தென்னிந்திய சினிமாவில் 200 படங்களுக்கு மேல் நடித்தவர். புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தவர். 10 ஆண்டுகளுக்கு மேலாக கமல்ஹசானுடன் இணைந்திருந்த அவர், சமீபத்தில் அவரிடமிருந்து பிரிந்தார். கவுதமி நடிகையாக இருந்தாலும் புற்று நோயாளிகளுக்கு உதவும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

தற்போது சுதந்திரமான தனி மனுஷியாக ஆகிவிட்ட கவுதமி கடந்த சில மாதங்களாக அரசியலில் ஆர்வம் காட்டுகிறார். முதலில் பிரதமர் நரேந்திரமோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்து ஆச்சர்யப்படுத்தினார். அதன்பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்தபோது அவரது சாவில் மர்மம் இருக்கிறது என்பதை முதன் முதலில் வெளிப்படையாக சொன்னவர், பிரதமருக்கும் கடிதம் எழுதினார். முதல்வர் பன்னீர் செல்வம் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று சொன்னதும் அதனை வரவேற்றார். இடையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார்.

அரசியலில் ஏற்கெனவே இருக்கும் குஷ்பு உள்ளிட்ட நடிகைகள் காட்டாத ஆர்வத்தை கவுதமி காட்டியது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் நேற்று முதல்வர் பன்னீர் செல்வத்தை சந்தித்து தனது ஆதரவை அவர் தெரிவித்துள்ளார். இத்தனைக்கும் அவர் அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியிலும் உறுப்பினர் இல்லை.

முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்தின் அணி வலுவாக அமையுமானால் அந்த அணியில் நேரடியாக சேருவார் என்கிறார்கள். ஓ.பன்னீர் செல்வத்துடன் அவர் நேற்று ஒரு மணி நேரம் பேசியதிலிருந்து இது உறுதியாகிறது. எது எப்படி இருந்தாலும் கவுதமி அரசியலுக்கு வருவது வெகுதூரம் இல்லை என்று கோடம்பமாக்கத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top