புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

தளபதி மற்றும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்த கௌதம் மேனன்.. பரபரப்பான பேட்டி!

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் முன்னணி நடிகர்கள் தான் தளபதி விஜய்யும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும். இவர்களை வைத்து படம் எடுக்க முன்னணி இயக்குனர்கள் முதல் இளம் இயக்குனர்கள் வரை அனைவரும் துடித்துக் கொண்டிருக்கின்றன.

ஏனென்றால் அந்த அளவிற்கு ரசிகர்களின் மத்தியில் இவர்களுடைய திரைப் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைக்கும். இந்நிலையில் தளபதி விஜய் தளபதி மற்றும் சூப்பர் ஸ்டாரை வைத்து தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள துடித்துக் கொண்டிருப்பதாக பிரபல முன்னணி இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், சமீபத்தில் அளித்துள்ள பேட்டியின் மூலம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கௌதம் மேனன் தளபதி விஜய்யை வைத்து ‘யோகன்’ என்ற படத்தை இயக்கி வந்தார். ஆனால் ஒரு சில பிரச்சினைகளால் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் மீண்டும் தளபதி விஜய்யை வைத்து வெற்றிப்படம் உருவாக்க முயற்சி செய்யும் கௌதம் மேனன் விஜய்யை வைத்து ஒரு மியூசிக்கல் லவ் ஸ்டோரி படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளாராம். அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து உணர்ச்சிபூர்வமான படத்தை எடுக்க உள்ளாராம்.

thalapathy-super-star-cinemapettai

அதற்கான முழு திரைக்கதையுடன் தளபதி விஜய் மற்றும் சூப்பர் ஸ்டாரைசந்தித்தால், கண்டிப்பாக எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன்.

ஆகையால் தமிழ் சினிமாவில் அருமையான கதைகளை படமாக எடுக்கும் கெட்டிக்காரரான கௌதம் மேனன், தளபதி விஜய் மற்றும் சூப்பர் ஸ்டாருடன் இணைய உள்ளதை அறிந்த தளபதி மற்றும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்  உற்சாகமடைந்துள்ளனர்.

எனவே இந்த தகவலானது ஆசையாக மட்டுமில்லாமல் செயல்படுத்த வேண்டும் என்பதே தளபதி மற்றும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- Advertisement -

Trending News