கே.எம். சர்ஜுன்

Sarjun Km

குறும்பட இயக்குனராக சினிமா உலகில் கால்தடம் பதித்தவர். இவர் நயன்தாரவை வைத்து திகில் படம் ஒன்றை இயக்கப்போகிறார் என்பது நாம் அறிந்த செய்தியே. இவர் இதற்கு முன்னரே ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளது இங்கு பலருக்கு தெரியாத ஒன்று .

எச்சரிக்கை

sarjun with manirathinam

லட்சுமி, மா குறும்படங்கள் எடுப்பதற்கு முன்பே அவர் இயக்கி இயக்கி வெளியாகாமல் இருக்கும் படம் தான் ” எச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் பகுதி”. சத்யராஜ் வரலக்ஷ்மி சரத்குமார் இப்படத்தில் நடித்துள்ளனர். கிஷோர் மற்றும் விவேக் வில்லனாக நடித்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  பாகுபலி ராணா - பிரபு சாலமன் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
echarikkai release date

கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இதற்கு சுதர்ஷன் ஸ்ரீநிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார், கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில், படத்தின் வெளியீட்டு உரிமையை ‘கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்’ நிறுவனம் சார்பில் தனஞ்செயன் வாங்கியுள்ளார். மேலும் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மார்ச் 1 முதல் வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம். எந்த புதிய படமும் ரிலீசாகாது என்று அறிவித்தனர். இந்த பிரச்சனை முடிந்த உடன் படத்தை ரிலீஸ் செய்யப்போகிறார்கள்.

இந்நிலையில் முன்பே சொன்னது போல கவுதம் மேனன் படத்தின் சிங்கள் பாடலை தன் ட்விட்டரில் ல்வெளியிட்டுள்ளார் .