Tamil Cinema News | சினிமா செய்திகள்
வடசென்னை பார்த்த ஸ்டைலிஷ் இயக்குனர் கவுதம் மேனன் ரியாக்ஷன் இது தான்.
வட சென்னை
வெற்றிமாறன் – தனுஷ் மூன்றாவது முறையாக இணைந்து பொல்லாதவன், ஆடுகளம் வரிசையில் கொடுத்துள்ள படம் வடசென்னை. மல்டி ஸ்டார்கள் கொண்ட காங்ஸ்டர் ட்ராமா படம். மூன்று பகுதிகளாக வெளியாக உள்ள படத்தின் முதல் பார்ட் வெளியாகி சினிமா ரசிகர்கள், நட்சத்திரங்கள் என அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

Vada-Chennai
இந்நிலையில் இயக்குனர் கவுதம் மேனன் தன் ட்விட்டரில் படத்தை பாராட்டி இரண்டு டீவீட்டை பதிவிட்டுள்ளார்.
வெற்றிமாறன் – தலை வணங்குகிறேன், அழகாக படமாக்கி இயக்கியுள்ளாய். எழுத்து இயக்கம் என பெயர் வரும் பொழுது கேட்கும் கை தட்டல் சத்தம் சூப்பர் அனுபவம். தனுஷிடம் இருந்து கண்களை அக்கற்ற முடியவில்லை. எப்பொழுதும் போல மிக சுலபமாக எளிதில் அருமையாக செய்துள்ளார்.
VADA CHENNAI@VetriMaaran take a bow please ! So brilliantly staged&directed. No better feeling than listening to the crowds applaud when the ‘written and directed by’ credit comes up on screen. Couldn’t take my eyes off Dhanush who’s brilliant in what comes so easy to him.
— Gauthamvasudevmenon (@menongautham) October 19, 2018
ஆண்ட்ரியா கதாபாத்திரம் வீரம் கலந்து உயர்ந்து காணப்படுகிறது. அழகு. ஐஸ்வர்யா ராஜேஷ் வசீகரம், சீனை ஸ்லாங் பேசி கவர்கிறார். தன் மனதில் தோன்றுவதை பேசி, ஆண்களுக்கு நிகராக திருப்பி தருவது பார்க்க நன்றாக இருந்தது.
VADA CHENNAI
Andrea stands tall in a boldly etched character. Beauty and Poise…
Aishwarya Rajesh is magnetic and draws you in playing a foul mouthed young girl. Nice to see a girl giving it to the guys in expletives and speaking her mind!— Gauthamvasudevmenon (@menongautham) October 19, 2018
