துருவங்கள் 16 படத்தின் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் கார்த்திக் நரேன். பத்ரி கஸ்தூரி, கவுதம் மேனன் தயரிப்பில் உருவாகிறது அவரின் அடுத்த படம் நரகாசூரன் .

அரவிந்த் சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித், ஷரியா சரண், ஆத்மிக்கா ஆகியோர் நடிப்பில் வெளிவரும் இப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் வகையறா. பின்னணி இசை மாசிடோனியா நகரத்தில் சிம்பொனி இசைக்குழுவுடன் இணைந்து கம்போஸ் செய்யப்பட்டது .

இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் நரேன் இரு தினங்களுக்கு முன் பதிவிட்ட ட்வீட் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

“சில நேரங்களில் தவறான நம்பிக்கை உங்களைக் கொன்றுவிடும். ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு முன், ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள். மிகவும் கொடுமையான விஷயம் நீங்கள் புரியாத தவறுக்காக உங்களின் கனவு சிதைக்கப்படுவதை காண நேர்வது தான். வெறுப்பின் உச்சத்தில் நான்.” என்ற இந்த டீவீட்டில் கவுதம் அவர்களை தான் குறிப்பிடுகிறார் என்று அனைவரும் கிசு கிசுத்தனர்.

இந்நிலையில் கவுதம் மேனன் அவர்கள் தன் ட்விட்டரில் வேறு ஒருவரை பாராட்டி மறைமுகமாக ட்வீட் செய்தார். அந்த டீவீட்டில் “சில இளம் இயக்குனர்கள் அடுத்தவருடம் சேர்ந்து வளர்ச்சியை நோக்கி செல்வதை விட்டுவிட்டு, தங்களின் கனவு நசுக்கப்பட்டுவிட்டதாக புலம்பும் வேலையில், இங்கு ஒரு புது டீம் பெண்கள், கிரிக்கெட், பெண் விடுதலை சி எஸ் கே என அழகான குறும் படத்தை எடுத்துள்ளனர்.” என்று அந்த டீமை பாராட்டினார்.

இந்நிலையில் மறைமுகமாக சென்ற இந்த மனக்கசப்பு நேரடி வாக்குவாதமாக மாறியது. இயக்குனர் கார்த்திக் நரேன் தன் அடுத்த டீவீட்டை பதிவிட்டார்.

” பலர் அறிவுரை கூறினாலும் நாங்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்தே கூட்டணி அமைத்தோம் சார். ஆனால் நீங்கள் எங்களை குப்பை போல நடத்தினீர்கள், இறுதியில் நாங்களே முதலீடு செய்ய வேண்டியதாகிவிட்டது. பயந்து ஓடுவதற்கு பதில் புலம்பிக்கொண்டே கூட பிரச்னையை எதிர்கொள்வது மேல். தயவு செய்து வேறு இளம் படைப்பாளி யாருக்கும் இப்படி செய்து விடாதீர்கள்.மிககும் கஷ்டமாக இருக்கும் ” என கார்த்திக் நரேன் தன் தரப்பு வாதத்தை சொன்னார்.

மேலும் அனைவரும் எதற்கு இயக்குனர் ஒரு படத்தில் தன் பணத்தை முதலீடு செய்கிறார் என்று அனைவரும் யோசித்த வேலையில், அர்விந்த் சாமி ஒரு டீவீட்டை பதிவிட்டார். அதில் “ஆம். நாம் அனைவரும் சிலவற்றை வளர்த்துக் கொள்ளலாம். ஜோடி கண்கள் நாம் அடுத்தவருக்கு என்ன செய்கிறோம் என்பதை பார்ப்பதற்கு. காதுகள் உண்மையை கேட்பதற்கு. மனசாட்சி நம் தவறை சுட்டிக்காட்டுவதற்கு, செய்த தவறை ஒப்புக்கொள்வதற்கு மற்றும் மன்னிப்பு கேட்பதற்கு…. அவ்வாறு இல்லமால் நிறைவேற்ற முடியாத பல கமிட்மெண்டுகலை அதிகரித்துக்கொண்டே செல்வது.” என்று கூறினார்.

இதில் இவர் இயக்குனருக்கு ஆதரவாக கவுதம் மேனனுக்கு எதிராக கருத்து பதிவிட்டது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

இந்நிலையில் கவுதம் மேனன் இந்த அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வர எனது பதில். இது கார்த்திக் மற்றும் அனைவருக்கும் என்று ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.

அதன் சார்மசம் பின்வருமாறு.
GVM Twitter Note

“நரகாசூரன் படத்தில் நிறைய நல்ல விஷயங்கள் நடந்து வந்த நேரத்தில் இயக்குனரிடம் இருந்து வந்த ட்வீட் என்னை வேதனைப்படுத்தியது. நான் எனினும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, என்னினும் மீடியா விடம் இருந்து வந்த சில போன் என்னை மேலும் வேதனை அடைய செய்தது. அதனால் தான் அந்த டீவீட்டை பதிவிட்டேன், அதற்க்கு கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

ஆரம்பம் முதலே இயக்குனருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது. அவர் கேட்ட சம்பளம் அதிகம் வாங்கும் நடிகர்கள், போஸ்டர், டீஸர், வெளிநாட்டில் பின்னணி இசை என அனைத்தும் அளித்தோம். மேலும் முதலீட்டாளர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டும். நான் கார்த்திக்கிடம் லாபத்தில் 50 சதவிகிதம் கேட்டகவில்லை. அவர் விருப்பப்பட்டால் நான் இந்த படத்தை விட்டு விலகிக்கொள்கிறேன். சில தவறான கருத்து மாற்றம், சினிமா பிஸ்னஸ் எவ்வாறு வேலை செய்யும் என அவருக்கு தெரியவில்லை. ”

மேலும் அடுத்து துருவநட்சத்திரம், எனை நோக்கி பாயும் தோட்டா, நெஞ்சம் மறப்பதில்லை படங்கள் பற்றியும் அதில் கூறியுள்ளார்.

GVM Twitter Note

“மேலும் அணைத்து தயாரிப்பாளர்களும் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனை தான் இது. இந்த தடையை தாண்டி படத்தை வெளியிடுவோம்.கார்த்திக் அடுத்த படம் ஆரம்பிப்பதை நாங்கள் தடுக்க மாட்டோம், தாராளமாக அவர் துவங்கட்டும் , அவரும் துவங்கிவிட்டார். அரவிந்த் சாமி முழு சம்பளமும் கொடுத்தால் தான் டப்பிங் செய்வேன் நின்றார், விரைவில் அவர் பிரச்சனை தீர்க்கப்படும். அவர் டப்பிங் முடிந்தால் ரிலீஸ் தேதி கிடைப்பதை பொறுத்து படத்தை ரிலீஸ் செய்யலாம். எனக்கும் கார்த்திக்கும் உள்ள மனக்கசப்பை சரி செய்துவிட்டோம், நாங்கள் இந்தப்படம் வெளிவருவதற்கான வேளைகளில் ஈடுபட்டுள்ளோம். நன்றி” என கூறி முடித்துள்ளார் கவுதம்.

கவுதம் மேனன் பாராட்டிய “டியர் சி எஸ் கே”!!! வீடியோ லிங்க் !