fbpx
Connect with us

Cinemapettai

விக்ரம், துருவநட்சத்திரம் பற்றி ஸ்டேட்டஸ் தட்டிய கவுதம் மேனன்.. அப்போ ரிலீஸ் ஆகுது! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விக்ரம், துருவநட்சத்திரம் பற்றி ஸ்டேட்டஸ் தட்டிய கவுதம் மேனன்.. அப்போ ரிலீஸ் ஆகுது! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

இன்றைய நெக்ஸ்ட் ஜென் இயக்குனர்கள் பலருக்கு இவர் தான் ரோல் மாடல்; தன் ஸ்டைலிஷ் மேக்கிங் வாயிலாக பலரையும் கவருபவர் கெளதம் மேனன். எனோ சமீபகாலமாக தடுமாற்றத்தில் உள்ளது இவரது சினிமா க்ராப். இயக்கும் படங்களும் ரிலீஸ் ஆகவில்லை. தயாரிப்பில் இருந்த படங்களும் சிக்கலில் உள்ளது.

இந்நிலையில் இவரின் அடுத்தடுத்த மூன்று படங்கள் ரிலீசாகிறது. ஐசரி கணேஷ் உதவியால் எனை நோக்கி பாயும் தோட்டா இம்மாதம் ரிலீஸ். அடுத்தத்த்தாக வருண் நடிப்பில் வேல்ஸ் பிலிம் இன்டர்நெஷனல் தயாரிப்பில் ஆக்ஷன் படம் ஜோஷ்வா ஷூட்டிங்கும் நடந்து வருகின்றது.

இந்நிலையில் தனது கனவு படமான துருவநட்சத்திரம் பற்றிய அப்டேட்டையும் நேற்று வெளியிட்டார் இயக்குனர்.

“இந்தப்படம் வெளிவராமல் நிறைவாகாது இந்த சீசன். என மனதுக்கு மிகவும் நெருக்கமான படம், அதே சமயம் தரமானது கூட. சீயான் விக்ரம் அவர்களுடன் பணி புரிந்தது சூப்பர் மற்றும் பாசிட்டிவ் அனுபவம். அடுத்த 60 நாட்கள் இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலை நடக்கும் , ரிலீஸ் நோக்கி பயணத்திக் கொண்டிருக்கிறோம். விரைவில் ஜான் உங்களை சந்திப்பான். ”

இந்த ட்வீட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top