நேற்று அதிகாலை நான்கு மணியளவில் கெளதம் மேனனின் சொகுசு சார் விபத்துக்குள்ளாகியது. அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

மாமல்லபுரத்தில் இருந்து படப்பிடிப்பை முடித்து விட்டு தனது  காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தபொழுது  செம்மஞ்சேரி, ஆவின் பால் பண்ணை சிக்னல் அருகே, துரைப்பாக்கத்தில் இருந்து வந்த ஒரு லாரி சிக்னலில் ‘யு’ டர்ன் அடித்து மீண்டும் துரைப்பாக்கம் நோக்கி சென்றது. இதை சற்றும் எதிர்பார்க்காத கவுதம்மேனன் தனது காரை பிரேக் போட்டு நிறுத்த முயன்றுள்ளார்.அவரது கார் டிப்பர் லாரி பின்னால் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. அவரது கார் பலத்த சேதத்துக்கு உள்ளானது.

நேற்று அதிகாலை நான்கு மணியளவில் கெளதம் மேனனின் சொகுசு சார் விபத்துக்குள்ளாகியது. அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்த ஆக்சிடன்ட்  குறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இயக்குநர் கவுதம் மேனனின் கார் விபத்துக்குள்ளானது திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கெளதம் மேனன் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. போலீஸ் விசாரணையில் அவர் மது அருந்த வில்லை என்றும், ஓவர் ஸ்பீட் செல்லவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். எனினும் தவறு லார்ரி ஓட்டுநர் மீதா அல்லது இயக்குனர் மீதா என்றும் விலகவில்லை.

Gautham-Menon-Director

பலரும் சூழ்நிலை என்று அறிந்து கொள்ள காத்திருந்த நேரத்தில் தான் ட்விட்டர் பக்கத்தில் தான் நன்றாக இருப்பதாகவும், தனக்கு உதவிய எச்.சி.எல் நிறுவனத்தில் பணிபுரியும் கோபாலகிருஷ்ணன் என்பவருக்கு நன்றியையும் தெரிவித்தார்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

Weekend Machan

ஒரு புறம் தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா, மறுபுறம் விக்ரமின் துருவநட்சத்திரம். அது மட்டும் அல்லாமல் தன் தயாரிப்பில் வீக் எண்ட் மச்சான் என்னும் வெப் சீரிஸ் என்று மிக பிஸியாக இருந்தார் கவுதம் மேனன். அவரின் அந்த சொகுசு கார் தான் துருவநட்சத்திரம் டீசரில் வந்தது என்றும் சிலர் கூறிவருகின்றனர்.