மேன் ஆப் தி மேட்ச் பெற்ற இளம் வீரருக்கு ஆதரவாக, டெல்லி தேர்வுக்குழுவை சேர்ந்த இருவரை கழுவி ஊத்தி ஸ்டேட்டஸ் பதிவிட்ட கவுதம் கம்பிர்.

இந்திய அணியின் முன்னாள் ஓபன் மற்றும் தற்பொழுது ஓய்வுக்கு பின் முழு நேர அரசியல் பணியில் பி ஜே பி சார்பில் செயல் பட்டு வருபவர் கெளதம் கம்பிர். என்றுமே தனது மனதி பட்டத்தை நேர்பட பேசுபவர்.

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் அசத்தலாக பந்து வீசி, தன் அறிமுக போட்டியில் மேன் ஆப் தி மேட்ச் விருது பெற்று கலக்கினார் நவதீப் சைனி.  17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அமர்க்களப்படுத்தினார். இதில் ஆட்டத்தின் 20–வது ஓவரை அவர் மெய்டனாக வீசினார். 20 ஓவர் கிரிக்கெட்டில் இறுதி ஓவரை மெய்டனாக வீசிய முதல் இந்தியர் இவர் தான்.

அரியானா மாநிலத்தில் பிறந்தவரான நவ்தீப் சைனி முதல்தர கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக ஆடி வருகிறார். நவ்தீப் சைனியை 2013–ம் ஆண்டு டெல்லி ரஞ்சி அணியில் சேர்க்க  கவுதம் கம்பீர் முயற்சித்த போது, அப்போது டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளாக இருந்த  பி‌ஷன்சிங் , சேட்டன் சவுகானும் எதிர்த்தனர். அவர்களுடன் கம்பீர் கடும் வாக்குவாதம் செய்தார். நீண்ட போராட்டத்திற்கு பிறகே அவருக்கு ரஞ்சி வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதனை கிளறும் விதமாக தான் கம்பிர் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டினார். ” ‘இந்திய அணியில் அறிமுகம் ஆன நவ்தீப் சைனிக்கு வாழ்த்துகள். இந்திய அணியில் பந்து வீசுவதற்கு முன்பே அவர் 2 விக்கெட்டுகளை சாய்த்து விட்டார். அந்த விக்கெட்டுகள் பி‌ஷன்சிங் பெடி, சேட்டன் சவுகான். அவரது கிரிக்கெட் திறமையை குறைவாக மதிப்பிட்டு முடக்க நினைத்தவர்கள்.”

பிஷன் பேடி “தகுதியில்லாத மகனை அணியில் சேர்க்க நினைத்தார். மேலும் சேத்தன் தந்து உறவினரை சேர்க்க முயன்றார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

பேடி மற்றும் சவுகான் மீது கம்பீர் குற்றம்சாட்டுவது இது முதல்முறை அல்ல.

Leave a Comment