Sports | விளையாட்டு
பிராட்மேன் + ஜேம்ஸ் பாண்ட் என்ற நினைப்பு காம்பிருக்கு – சுயசரிதையில் அப்ரிடி. ட்விட்டரில் தக்க பதிலடி கொடுத்த கெளதம் கம்பிர்.
கிரிக்கெட் உலகின் மார்க்கெண்டேயன் ஷாஹித் அப்ரிடி, வாஜித் கான் என்பவருடன் இணைந்து இவர் வாழ்கையை பற்றி GAME CHANGER என சுயசரிதையாக எழுதியுள்ளார். இந்த புக்கில் தனது உண்மையான வயது, தனது நாட்டு வீரர்கள், கேப்டன், கோச்சு மற்றும் பிறநாட்டு வீரர்கள் பற்றியும் எழுதியுள்ளார். காம்பிர் மற்றும் அப்ரிடி இடையே எப்பொழுதும் கசப்பான உறவு தான். அப்ரிடி கெளதம் கம்பிர் பற்றி எழுதிய விஷயங்களுக்கு பல கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பே தெரிவித்து வருகின்றனர்.
“கம்பிரின் அணுகுமுறை தான் தான் பிரச்னை. அவர் காட்டும் attitude அளவுக்கு ரெக்கார்ட் இல்லாதவர். டான் பிராட்மேன் மற்றும் ஜேம்ஸ் பாண்ட் ஆகியோரின் கலைவை போல் ஸீன் போடுவார் கம்பீர். பாகிஸ்தானில் இவரை போன்ற சிடு சிடு ஆசாமிகளை `சரியல்’ என அழைப்போம்.
ஆசிய கோப்பை போட்டியில் கம்பீர் சிங்கிள் எடுத்துவிட்டு நேராக என்னிடம் மோதலில் ஈடுபட்டார். அந்தநேரத்தில் நடுவர்கள் அப்பிரச்னையை முடித்து வைத்தனர். அவர்கள் முடிக்கவில்லை என்றால் நான் அன்று அதனை முடித்திருப்பேன். பாசிட்டிவான நபர்கள் ஆக்ரோஷமாக இருந்தாலும் எனக்குச் சவாலாக இருந்தாலும் விரும்புவேன். ஆனால், கம்பீர் பாசிட்டிவான நபர் கிடையாது.” என்றும், மேலும் சில கருத்துக்களையும் பதிவிட்டிருந்தார். ”
இந்நிலையில் முழு நேர அரசியலில் ஈடுபட்டுள்ள கெளதம் கம்பிர், இது குறித்து கிண்டலாக ட்வீட் தட்டியுள்ளார்.
அதில் “நீ காமெடியான மனிதனப்பா. எது எப்படியோ நாங்கள் இன்றும் பாகிஸ்தானியர்களுக்கு மருத்துவத்துக்கான டூரிஸ்ட் விசா வழங்கி வருகிறோம். நானே உன்னை நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறேன்.” என ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.
See what @SAfridiOfficial wrote about Gautam in his book. Afridi should have rather checked Gautam's record before writing filth. Poor Afridi! pic.twitter.com/wogsOPnHJS
— Chowkidar Abinash Biswal (@abi_biswal) May 4, 2019
இந்த ட்வீட் இந்திய ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கிரிக்கெட் உலகின் ஆதரவை பெற்று வருகின்றது.
