GG

ஐபில் இன் 11 வது சீசன் துவங்கி வெற்றிகரமாக நடை பெற்று வருகின்றது. சில அணிகள் வெற்றியையும், பல அணிகள் அதிர்ச்சி தோல்விகளையும் சந்தித்து வருகின்றன. டெல்லி, மும்பை, பெங்களூர் போன்ற அணிகள் பல மோசமான தோல்விகளை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியை டெல்லியின் கம்பிர் ராஜினாமா செய்துள்ளார். புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Shreyas Iyer
கவுதம் கம்பிர்

இந்தியாவின் சிறந்த துவக்க பாட்ஷமான்களில் இவரும் ஒருவர். டி 20 , ஒரு நாள் போட்டி, டெஸ்ட் என அனைத்து வித போட்டிகளிலும் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் கலக்கியவர். சிறந்த வீரராக இருப்பினும், நேர்பட பேசுபவர். தவறு செய்வது யாராயினும் சுட்டிக்காட்ட தயங்காதவர். அதன் காரணமாகவே இவர் பல நேரங்களில் கிர்கிட் பாலிடிக்சில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளார்.

ஐபில் போட்டிகளின் துவக்கத்தில் கம்பிர் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் வீரர், பின்பு கேப்டனாக செயல்பட்டவர். பின்னர் கொல்கத்தா அணிக்காக விளையாடினார். மேலும் கேப்டனாக இவர் இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளார்.

மீண்டும் டெல்லி திரும்பினார்

ஜனவரி மாதம் நடைபெற்ற ஐ.பி.ல் ஏலத்தில் டெல்லி நிர்வாகம் இவரை எடுத்து, அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். அணியின் கேப்டனாக இவர் நியமிக்கப்பட்டது அந்த அணிக்கு பலமாகவே பார்க்கப்பட்டது.

முதல் போட்டியில் மட்டும் அரைசதம் அடித்த காம்பீர் அடுத்தடுத்த போட்டிகளில் சொற்ப ரன்களில் அவுட் ஆனார். மேலும் 6 போட்டிகளில் 5 போட்டியில் தொடர் தோல்வி அடைந்துள்ளது இந்த அணி. எனவே கவுதம் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். எஞ்சியுள்ள போட்டிகளுக்கான டெல்லி அணியின் கேப்டனாக இளம் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Capatain – CEO- Coach

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள கருத்து “அணியின் இந்த நிலைக்கு நான் முழு பொறுப்பு ஏற்கிறேன். நான் அணிக்கு போதுமான பங்களிப்பை தரவில்லை. பதவி விலக இதுவே சரியான தருணம்.பதவி விலக சொல்லி அணியின் உருமையாளர்களிடம் இருந்து எந்த அழுத்தமும் எனக்கு இல்லை. ”

மேலும் தன் ட்விட்டரில் “நான் தலைவனாக இல்லை என்றாலும், வீரராக டெல்லி அணிக்காக போராடுவேன். டீம்மின் நன்மையை கருத்தில் கொள்ளும் பொழுது, தனி மனிதர் பெரியது கிடையாது.” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் கோச்ச பாண்டிங் பேசுகையில் “இன்னமும் 8 போட்டிகள் உள்ளது. எங்களிடம் கோப்பையை ஜெயிக்கும் திறமையும் , நம்பிக்கையும் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற சூழ்நிலையில் நானும் இருந்தேன். இது போன்ற முடிவை எடுப்பது கடினம் தான். எனினும் கம்பிர் டீமிற்கு முக்கியத்துவம் கொடுத்ததை நான் பாராட்டுகிறேன்.” என்றார்.

ஐபில் போட்டிகளில் இது ஒன்றும் புதியது அல்ல. சீனியர் வீரர் அணியில் இருந்து நீக்கப்படுவது, தலைமை மாற்றுவது அனைத்தும் சர்வ சாதாரணமாக நடக்கும் ஒன்று தான். தற்பொழுது கோச் ஆக இருக்கும் ரிக்கி பாண்டிங் கூட 2013 இல் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின் ரோஹித் சர்மா தலைமை பொறுப்பேற்று அணியை வேற லெவெலுக்கு கொன்று சென்றார். அது போலவே 23 வயதாகும் ஸ்ரேயாஸ் ஐயர் செய்வாரா ? பொறுத்திருந்தே பார்ப்போம்.