Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரு நாள் போட்டிகளுக்கான அணியில் மீண்டும் ரவிச்சந்திரன் அஷ்வினை சேர்க்க வேண்டும் – கெளதம் கம்பிர்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம்
முதல் ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் பரிதாபமாக தோற்றது. போட்டி முடிந்த பின் இணையதளத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கம்பிர் தான் அஸ்வின் அவர்களை ஆல் – ரௌண்டார் ஸ்தானத்தில் சேர்க்கவேண்டும் என்ற கருத்தை பதிவிட்டுள்ளார்.
இந்திய அணியின் ஆல்ரவுண்டர்க்கான தேடுதல் சில ஆண்டுகளாக நடக்கிறதே, யார் சிறப்பாக செயல்படுவார் ? ” என்ற கேள்விக்கு, யோசிக்காமல் ரவிச்சந்திரன் அஸ்வின் என பதில் தெரிவித்தார் கம்பிர்.
“அஸ்வின் மீண்டும் அணிக்கு அழைத்து வந்து நான்கவது இடத்தில் இறக்கலாம். தோனி, ராகுல் இருவரும் மீண்டும் கீழ் வரிசையில் இறக்கலாம். கேப்டன் கோலி வழக்கம்போல 3வது இடத்தில் ஆடவேண்டும். நான்காவது இடம் என்பது அணிக்கு மிக முக்கியமானது. 60,70 பந்துகளில் சதம் அடிக்க வேண்டியதில்லை. பால் பை பால் றன் எடுத்தாலே போதும். மேலும் அஸ்வின் சேர்க்கும் பட்சத்தில் ஆறாவது பந்துவீச்சாளர் பணியையும் அவர் சிறப்பாக செய்வார்.” என்று கூறியுள்ளார்.
அஸ்வின் மட்டுமன்றி ஜடேஜா அல்லது க்ருனால் பாண்டியவும் நல்ல தேர்வு தான் என்று கூறி முடித்துள்ளார்.
