இணையத்தின் அசுர வளர்ச்சியால் திரை துறையினருக்கு பல நல்ல விஷயங்கள் நடந்திருந்தாலும் மறுபுறம் கெடுதலும் தான் அரங்கேறியுள்ளது. படம் வெளி வரும் தினத்தன்றே தமிழ் ராக்கர்ஸ் அப்லோட் செய்து விடுகிறான். படம் ரிலீஸான சில மணி நேரங்களில் யூ டியூப்பில் பலரும் படத்தை விமர்சித்து வீடியோ பதிவிடுகின்றனர். அதுமட்டும் அல்லாது விமர்சகர்கள், ரெவெரியூ செய்பவர்கள், சினிமா ட்ராக்கர்ஸ், பொது மக்கள் என் பலரும் ஹாஷ்டாக் இட்டு படத்தை பற்றி தங்கள் கருத்தை தெரிவிக்கின்றனர்.

Thana-Serndha-koottam surya vignesh shivan
TSK

சொல்லிட்டாரு****! கொந்தளித்த விக்னேஷ் சிவன்

கடந்த சில நாட்களுக்கு முன் நம் ‘அன்பான இயக்குனர்’ விக்னேஷ் சிவன் கடுப்பாகி  ஒருவரை ட்விட்டரில் வறுத்தெடுத்தார். இதோ அந்த தகவல்கள் கொண்ட லிங்க் …

கவுரவ் நாராயணன்

Gaurav Narayanan with KS Ravikumar

தூங்காநகரம் , சிகரம் தொடு மற்றும் உதயநிதிஸ்டாலின், மஞ்சிமா மோகன் ஆகியோர் நடிப்பில் இப்படை வெல்லும் படங்களை இயக்கியவர் தான் கவுரவ் நாராயணன். இவர் தற்பொழுது தன் ட்விட்டரில் வீடியோ ஒன்றை அப்லோட் செய்துள்ளார். அதில் மிகவும் தாழமையாக தான் சொல்ல வந்த கருத்தை அழகாக பதிவிட்டுள்ளார். இதோ அந்த  லிங்க்..

மேலும் ஆன்லைன் ரெவியூ செய்பவர்களில் ஒரு சிலர் தான் இது போல தவறான செய்திகளை பரப்புகிறார்கள் என்றும் அவரே கூறியுள்ளார்.

இந்த ட்வீட் வீடியோ வைரலானது. பலரும் கவுரவின் கருத்தை ஆமோதித்து வருகின்றனர்.